"என்ன மலமேல நிக்குற வர்த்தினி மேடம்.... எங்கிட்ட அத்தன அப்பு வாங்குனப்ப கூட அந்தாள் திமிரா தான் நின்னுட்டு இருந்தான்! உங்களப் பாத்ததுக்குப்புறம்
காணிக்கைங்குறான், தட்சணைங்குறான்; கையெடுத்து கும்பிட வேற செய்யுறான்? எப்டி நடந்தது இந்த மேஜிக்?" என்று புருவம் தூக்கி தன்னிடம் கிண்டலாக கேட்டவனிடம் லேசாக சிரித்தவள்,"எடுத்து சொன்னதுனால நடந்தது! ஆவேசத்த காட்டாம, அன்ப காட்டுனதுனால நடந்தது! இப்ப போற இந்த ஆளு இனிமே இவரோட வாழ்க்கையில கண்டிப்பா திருட மாட்டாரு....!"
"ஏதாவது தப்பு செய்ய நினைக்குறதுக்கு முன்னாடியே குற்ற உணர்ச்சி அவரை குடைய ஆரம்பிச்சிடும்..... நீங்க அவர எத்தன அடி அடிச்சாலும் இந்த மாற்றத்த கொண்டு வர முடியாது. மனசு விட்டு பேசுனா தான் செய்ய முடியும்!" என்று அவனிடம் சொன்னாள்.
"இந்த எடுத்து சொல்றது, பல்பொடி போட்டு தேய்க்குறதெல்லாம் நமக்குத் தெரியாது, வரவும் வராதுங்க மேடம்! ரெண்டு அப்பு வாங்குறப்ப தான் அடுத்து இப்டி செய்யக்கூடாதுன்னு அறிவு வரும்!" என்றவனிடம்,
"அடுத்தவங்களுக்கு அறிவு வர்றதெல்லாம் இருக்கட்டும்; உனக்கு எப்ப வரப்போகுது அறிவு? ஒன்னோட பணம் மொத்தத்தையும் அப்டியே ஆட்டைய போடத் தெரிஞ்சாருன்னு எங்கிட்ட சொன்னியே அதுக்கு என்ன அர்த்தம்? வீட்டுக்கு அட்வான்ஸ குடுன்னு பணத்த வாங்கிட்டு, அத இன்னும் என்னோட பணம்னு சொன்னா..... இன்னிக்கு செய்யப்போற செலவுக்கு எங்கிட்ட இருந்து நீ பணத்த வாங்கி வச்சுருக்க அதான?" என்று கேட்டு கூர்பார்வையால் அவனை பார்த்தாள் பர்வதவர்த்தினி.
"பெறவு.... உன்னோட சொந்தக்காரவுங்க காரியத்துக்கு நீதானம்மா செலவு பண்ணனும்? அதுனால தான் ஒங்கிட்ட இருந்து பணத்த கேட்டு வாங்குனேன். காரை எடுக்க வந்துட்டு, இங்கயே இவ்வளவு நேரமா வாய் பேசிட்டு ஒக்காந்துருக்குறோம் பாரு! கெளம்ப வேண்டாமா? வா போவோம்!" என்று சொன்னவனிடம்,
"ஏய்... ஜெயன்; ஒரு நிமிஷம்!" என்று சொன்னவள் இவ்வளவு நேரமாக அவன் பின்னால் நின்று கொண்டு இருந்து விட்டு இப்போது வேகமாக நடந்து அவன் முன்பாக சென்றாள்.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...