இருபது வயதில் முதல்முறையாக கார் ஸ்டீயரிங்கை கையில் பிடித்த போது தோன்றிய அதே நடுக்கத்தை படுபாவி அவளைத் தொட்ட அவன் கையில் இன்றும் வரவழைத்திருந்தாள். அன்றிரவு சமமையல் அறையிலும் இப்படித் தான் கை காலெல்லாம் நடுங்கித் தொலைத்தது.
அவன் கேட்ட ஒரே ஒரு முத்தத்தை வாக்குவாதம் செய்யாமல் நல்லதனமாக கொடுத்திருந்தாள் என்றால் இப்போது இவ்வளவு வலிகளை அவள் தாங்கியிருக்கவே தேவையில்லை.
இப்போது அவர்களிடையே இருக்கும் பெரிய பிரச்சனையே அதுதானே? அவனை அவளுக்குப் பிடிக்கிறது; அவனது நெற்றி முத்தத்தை பிடிக்கிறது....... ஆனால் முத்தங்கள் கழுத்தோரத்தில், காதோரத்தில், இதழில், உடலில் என நீண்டு கொண்டே சென்றால் கண்களில் பிடித்தமின்மையையும், சின்னதாய் ஒரு அருவருப்பையும் அல்லவா காட்டுகிறாள்?
"இவ என்ன யானை, குதிரை மாதிரி நான் செல்லமா வளக்குற பிராணியா? நெதம் நெத்தியில முத்தம் குடுத்து தடவி நான் உங்கிட்ட அன்பா இருக்குறேன்னு சொல்றதுக்கு? இன்னிக்கு என்ன ஆனாலும் சரித்தான்; பாத்துக்குறேன் இவள!" என்று நினைத்த படி சமையல் அறைக்குச் சென்று அவளை அணைத்துக் கொண்டான்
அவன் ஒரு ஆண் என்பதற்காக வதனி என்றுமே அவனிடம் பயந்ததில்லை..... அப்படி ஒரு நிலைமையும் இதுநாள் வரை உருவாகவில்லை. ஆனால் இன்று அவனுடைய உறுதியான அணைப்பில், உன்னை இதிலிருந்து லேசில் விடுவிக்கவே மாட்டேன் என்று உணர்த்திய
உடல் வலிமையைப் பார்த்து கண்களில் பயத்துடன் பம்மியபடி அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள்."ம்ப்ச்! என்னைய பாத்து பயப்படாத வர்த்தினி; இதோ என் நெஞ்சுல விழுந்து ஒட்டிக்கிட்டு நிக்குறியே? இப்பயும் ஒனக்கு எம்மேல ஆச வரலயா.....? ஆனா எனக்கு அடிச்சுப் பொரண்டுக்கிட்டு ஆச வருதே?"
"ஒன்னோட குட்டி மூக்கு என் நெஞ்சோட உரசுறப்ப என் நெஞ்சு முடியெல்லாம் சிலித்துக்கிட்டு நிக்குது பாரேன்...... ஒரு பொண்ணோட நெருக்கம் இவ்ள இன்ப அவஸ்தைய குடுக்குமான்னு நெனக்க வைக்குது பாரேன்!"
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...