"வந்ததும் ஒண்ணுமே சொல்லாமன்னா? இப்ப நா என்ன சொல்லணும்? வர வர நீ என் பொறுமைய ரொம்ப சோதிக்குற ஹெட்லைட்டு! இதெல்லாம் ஒண்ணும் சரியில்ல பாத்துக்க!" என்று சொன்னவனிடம் ஆச்சரிய பாவத்துடன்,
"இன்னிக்கு நீ புடவையில அழகா இருக்க வர்த்தினின்னு சொல்லுவன்னு நினைச்சேன்! அதச் சொல்லாம நீ ஏதோ சரியில்லன்ற! என்ன சரியில்ல?" என்று கேட்டு அவனை வம்பிழுத்தாள் வதனி.
"ஒனக்கு அவ்ளோதான்டீ மரியாத ஏஎம் அம்மா!" என்று மூக்கினால் அனல் மூச்சு விட்டவனைப் பார்த்து உதடு பிதுக்கியவள்,
"மிஸ்டர் கடங்காரன்! ஒங்க கிட்ட நிறைய மரியாதய நான் கேக்கவேயில்லயே? எவ்ளோ குடுக்குறீங்களோ அவ்ளவே போதும் ஸார்!" என்று சொல்லி விட்டுப் புன்னகைத்தாள்.
"இப்டியெல்லாம் பேசிட்டு இருந்தா வேலைக்காகாது. நீ ரூமுக்குள்ள வா மொதல்ல!" என்று சொல்லி விட்டு அவளை அறைக்குள் தள்ளிக் கொண்டு போனவன் அறையின் கதவை மூடிவிட்டு அவளை ஒருமாதிரியாக பார்த்தான்.
"ஜெ.....யன்! நான் உங்கிட்ட இருந்து ஒரே ஒரு கிஸ் தான் கேக்கணும்னு நெனச்சேன்! வேற ஒண்ணுமில்ல!" என்று உள்ளுக்குள் போய் விட்ட குரலில் சொன்னவளிடம்,
"உங்களுக்கு ஒரே ஒரு முத்தம் வேணுமின்னா, நீங்க அந்த அளவுக்கு மட்டும் பேசியிருக்கணும் மல மேல இருக்குற மேடம்; நான் பாத்து ரசிக்கணுமுன்னு தான கஷ்டப்பட்டு இம்புட்டையும் செஞ்சீங்க? அதுக்கென்ன.... ரசிச்சுட்டாப் போச்சு!" என்று சொல்லிக் கொண்டிருந்தவன் கீழிருந்து வந்த காலிங் பெல்லின் ஒலியால் எரிச்சலுடன் உச்சுக்கொட்டினான்.
ஜெயன் மாடியை அவனது உபயோகத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் சவாரி இருக்கும் நேரங்களில் அவனை கீழிருந்தே முகில் எழுப்பி விடுவதற்காக வைக்கப்பட்ட அழைப்புமணி..... வெகுநாட்களுக்கு பிறகு அவனை இப்போதும் தொந்தரவு படுத்துவதற்காகவே அடிக்கப்பட்டு இருக்கிறது.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...