🌻 அழகி 5

518 16 3
                                    

அன்றிரவு பணி முடித்து மிகவும் அலுப்புடன் வந்து அப்படியே படுக்கையில் விழுந்த ஜெயன் மறுநாள் காலையில் தான் வதனியின் போர்ஷனுக்குள் கதவைத் தட்டி விட்டு வெளியே நின்றான்.

"உள்ள வாங்க ஸார்!" என்று கூப்பிட்டவளின் வரவேற்பில் அவளது போர்ஷனுக்குள் வந்து அவளை சந்தித்தான். அறையை சுற்றி ஒருமுறை தன் கண்களால் நோட்டமிட்டவன் அவளிடம்,

"எல்லாம் ஓகேங்களாங்க பர்வதவர்த்தினி? பேங்க்ல, இங்கன்னு நீங்க தங்கி இருக்குற இடமெல்லாம் உங்களுக்கு செட் ஆகிடுச்சுங்களா? நல்ல சூடான ஊருல இருந்து வந்துருக்கீங்க? மொதல்ல எங்க ஏரியா க்ளைமேட் செட் ஆகிடுச்சா உங்களுக்கு? வீட்டுக்குள்ள ரொம்ப ரொம்ப சிம்பிளா, கம்மியா தான் சாமானெல்லாம் வாங்கியிருக்கீங்க போலிருக்கு.....! ஏன் இது மட்டும் போதுமா?" என்று  அவளது சலிப்பைக் கண்டுகொள்ளாதவன் போல் இருந்து அவளிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டு அவளை துளைத்து எடுத்தான் ஜெயன்.

அவன் ஏன் அப்படி ஒரு கேள்வியை கேட்டான் என்றால் அந்த வீட்டில் அவளது செருப்புகள் மட்டுந்தான் ஜோடியாக இருந்தன. மற்றபடி பிவிசி சேர், பாய், அதன் மேல் மடித்து வைக்கப்பட்டிருந்த மெல்லிய ஃபோம் மெத்தை, பெட்ஸ்பெர்ட், தலையணை, குடை, தண்ணீர் கேன், அவளுடைய ஹேண்ட்பேக், சூட்கேஸ், அயர்ன் பாக்ஸ் இவை அனைத்துமே ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது.

சாதாரணமாக ஒரு வீட்டில் இவை ஒரே ஒரு பொருளாக இருந்தால் அது பெரிய விஷயமாக தெரியாதோ என்னவோ? இவளது வீட்டில் இவள் வேண்டுமென்றே பொருட்களை ஒற்றை ஒற்றையாக வாங்கி வைத்திருக்கிறாளா என்று நினைப்பு ஏனோ ஜெயனுக்கு அந்த அறையை நோட்டமிட்ட போது தோன்றியது.

"பாத்திரம் மட்டுந்தான் ஏழெட்டு வச்சிருக்கீங்க போலிருக்கு! மத்தபடி சன்னியாசி வாழ்க்க தானா?" என்று கேட்டவனிடம் லேசாக உதடு விரித்தாள்.

"கொஞ்சம் நல்லா தான் சிரியேன்டீ! பல்லைப் பூரா புடுங்கி தூரப் போட்டுட்டு நான் திருடிட்டுப் போக உன் வாய்க்குள்ள என்ன தங்கமும், வைரமுமாவா மாட்டி வச்சிருக்க?" என்று தன் மனதிற்குள்ளாக சலித்துக் கொண்டான் ஜெயன்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now