"அடி என் அழகு பட்டனு! நீ சொன்ன பேச்ச நான் எப்ப கேக்கல? எங்க வாப்பா கூட ஃபாரின்ல தான் போயி வேலை பாக்கப் போறேன்னு சொன்னேன். அத நீ வேண்டவே வேண்டாமுன்ன; நீ பன்னென்டாங்கிளாஸ் படிக்கும் போதே நாம ரெண்டு பேரும் நிக்கா பண்ணிக்குவோம்னு சொன்னேன்; லூசாடா நீன்னு என்னைய நல்லா திட்டிட்டு நீ பாட்டுல டிகிரி படிச்சு முடிச்ச! ரெண்டு குழந்தைங்க வேணும்னு கேட்டன்னு நான் உன்ன ரெண்டுதடவ தான் அம்மியாக்குனேன்.... ஆனா அதுல மட்டும் குதா நம்ம கேட்டத விட அதிகமா குடுத்து நம்மள கூடக்கொஞ்சம் சந்தோஷப்பட வச்சுட்டாரு!"
"இப்டி பொறந்ததுல இருந்து உம்பேச்ச தானடீ கேட்டு வாழ்ந்துட்டு இருக்கான் இந்த நஸாரு? இதுல எப்பயாச்சு ஒருக்க ஒரே ஒரு குவார்ட்டர வாங்கி நான் குடிச்சுட்டு வந்தா என்னவாம் உனக்கு?" என்று பாவம் போல பேசியவனின் பேச்சில் தெரிந்த காதலில் சொக்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் மரியம்.
"அந்த ஒரு பழக்கத்த மட்டும் விட்டுடு நஸாரு! மத்தபடி நான் உன்னைய எதுக்குமே திட்ட மாட்டேன்!" என்று சொன்னவள் கணவனுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து அவனுடைய முகத்தில் மண்டியிருந்த தாடி மற்றும் மீசையை சீப்பால் வாரிக் கொண்டிருந்தாள்.
"உம்பக்கத்துல வரணும்னா அந்த வாடையே இருக்கக்கூடாதுன்னு சொல்லி சொல்லி இப்பல்லாம் நீ தண்ணிய ரொம்ப கொறைக்க வச்சுட்டடீ! மொத்தமா நிப்பாட்டணும்னா அதுக்கு கொஞ்ச நாள் ஆகும். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரேன்!" என்று சொன்னவன் அவளிடம்,
"இப்டி என்னைய தனியா கட்டிப்புடிச்சிக்கிட்டு கொஞ்சறதுக்குத்தான சீக்கிரம் கெளம்புன்னு அதட்டுன? நீ குடுத்த சிக்னலு பாவம் நம்ம ஜெயனு பயலுக்கு கூட புரிஞ்சு போச்சு போலடீ! பாரு, வெளிய போயி நிக்குறன்டா மாப்புளன்னு சொல்லிட்டு அடிச்சுப் பொரண்டு ஓடியே போயிட்டான்! அவனோட அம்மா வீட்ல தனியா இருப்பாங்கடீ! நாங்க கிளம்பட்டுமா? மிச்சத்த ராத்திரில பாத்துக்கலாம்!" என்று கேட்டு அவளைப் பார்த்து கண்சிமிட்டினான்.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...