🌻 அழகி 71

308 13 3
                                    

"இவ்ள நேரமா உள்ள என்னத்த நோண்டிக்கிட்டு இருந்த நீயி?" என்று கேட்ட தன்னுடைய மகனிடம் லேசாக புன்னகைத்தவர்,

"இன்னிக்கு நம்ம வதனிப்புள்ளைக்கு ஏதாவது பரிசு குடுக்கணும்டா ஜெயனு.... அதான் உங்கப்பா என்னைய வெளிய கூட்டிட்டுப் போகயில எனக்குன்னு வாங்கிக் குடுத்த சில பொருளுல ரொம்ப நல்லத தேடிப் பிடிச்சு எடுத்தாந்தேன்.... வதனிக்கண்ணு; இத வாங்கிக்கடா தங்கம்!" என்று அவளிடம் சொன்னார்.

ஒரு மயிலின் வடிவில் அமைந்திருந்த வெள்ளியிலான நகைப்பெட்டியில் மயிலின் வயிற்றுப் பாகத்தை திறந்தால் அதில் இரண்டு மூன்று தங்க நகைகளை பத்திரப் படுத்திக் கொள்ளலாம் போன்ற அமைப்பில் இருந்தது.

"மாமா உங்களுக்குன்னு வாங்கி தந்த பொருள்ல இது மட்டும் அப்டி என்ன ஸ்பெஷல் முகில்ம்மா?" என்று கேட்டவளிடம்,

"அத இங்க குடு! எனக்கெல்லாம் எங்க அமுதாம்மா இத்தன வருஷத்துல ஒருநா கூட
இத மாதிரி ஒரு பொருளக் காட்டுனதேயில்ல!" என்று சொல்லி விட்டு மயிலின் வயிற்றை திறந்து திறந்து மூடி விளையாடிக் கொண்டிருந்தான் ஜெயன்.

"ஒன்னையமாரி திருவாத்தன் கையில எல்லாம் எங்க வீட்டுக்காரர் எனக்குன்னு ஆசையா வாங்கிக் குடுத்தத ஏன்டா குடுக்குறேன் நானு? அத கொண்டா இங்க!" என்று அவனிடமிருந்து வெடுக்கென்று அந்தப் பொருளைப் பறித்து மகனுடைய முறைப்பை கண்டுகொள்ளாமல் திரும்ப அதை வதனியின் கைகளில் கொடுத்தார்.

"அவரு வாங்கித் தந்ததுல இது மட்டும் என்ன ஸ்பெசலுன்னு கேட்டல்ல வதனிக்கண்ணு.....? முந்தி எல்லாம் நா அவரு கூட வெளிய போகயில சின்னப் புள்ளத்தனமா எனக்குப் புடிச்சத வேணுங்குறத வாங்கிக் குடுக்கணும்னு கேட்டு அந்த எடத்துலயே அப்டியே ஒக்காந்துருவேன்டா தங்கம்!"  என்று சொன்ன தன்னுடைய அன்னையிடம்,

"எல்லாப் பொண்ணுங்களும் இப்டித்தே போல..... இங்கயும் அதே கத தான்! வாங்குறது அவளுக்கு
தேவையா இல்லையான்னு கூட பாக்குறது கெடயாது; சின்னப் புள்ளத்தனமா தான் சாமான வாங்கிக் குடுன்னு கேக்குறது!" என்று அன்னையிடம் சொல்லி விட்டு சிரித்துக் கொண்டான்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now