"கடவுளே..... இவனையாவது நாம போலீஸ், கம்ப்ளையிண்ட்னு சொல்லி மெரட்டுறதாவது? எங்க மெரட்டித்தான் பாரேன் பாப்போம்னு எஸ்ஐ நம்பருக்கு டயல் பண்ணவான்னு கேட்டுட்டுல்ல நிக்குறான் எழவெடுத்தவன்......! பேசி பேசி சும்மா எரிச்சலக் கெளப்பிக்கிட்டு.... ச்சை! இவனோட பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசுற அளவுக்கு இப்போ எனக்கு மனசுலயும், உடம்புலயும் சுத்தமா வலு இல்ல.....!" என்று நினைத்த வதனி அவனிடம்,
"ஸார்.....! என்னைய பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா?
சாதாரணமா எந்த குடித்தனக் காரங்க வீட்லயாவது ஒரு ஹவுஸ் ஓனர் இப்டி அடாவடியா கதவத் தொறந்துட்டு உள்ள வருவாங்களா?
இருக்குற கஷ்டம் போதாதுன்னு நீங்க வேற ஏன் ஸார் என்னைய இப்டி பாடாப்படுத்துறீங்க?என்னோட நெலைமய கொஞ்சமாவது புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க! முகில்ம்மா மாதிரி எனக்காக நீங்க கண்ணீரெல்லாம் சிந்த வேண்டாம்..... பட் ப்ளீஸ்! எனக்கு கொஞ்சம் ப்ரைவேட் ஸ்பேஸ் குடுங்க!" என்று அவனிடம் ஒரு சீற்றத்துடன் நியாயம் கேட்டு கைகூப்பி அவனது அலைபேசியை சட்டைப்பைக்குள் வைக்கச் சொன்னாள்.பிறந்த நாளில் காலையில் இருந்து ஒரு பரிசு கூட கிடைக்காத குழந்தை மாலையில் தன்னுடைய அன்னையிடம் எவ்வாறு உதடுபிதுக்கிக் கொண்டு கண்களில் நீர் திரள நிற்குமோ அதைப் போலவே தன் முன்பு நின்று கொண்டிருப்பவளைப் பார்க்கவே மிகவும் பாவமாக இருந்தது ஜெயனுக்கு. அவனது நினைப்பையே தான் அவளும் கேள்வியாகக் கேட்டாள்.
"என்னைய பாத்தா உங்களுக்குப் பாவமா இல்லையான்னு நீ எங்கிட்ட கேக்குறது..... எனக்கு கொஞ்சம் ப்ரைவேட்டா ஸ்பேஸ் குடுங்கன்னு சொல்றதெல்லாம் சரிதாம்மா.... ஆனா நீ இங்க குடித்தனம் இருக்கன்னு உங்கிட்ட யாரு சொன்னது? எத்தன மாச அட்வான்ஸ் குடுத்து இந்த வீட்டோட குடித்தனக்காரி நாந்தான்னு சொல்ற?" என்று ஒரு கேள்வி கேட்டவனைப் பார்த்து ஒரேடியாக திகைத்துப் போனவளுக்கு அவனிடமோ முகில் அம்மாவிடமோ இதுவரை தங்கும் இடத்திற்கான அட்வான்ஸ் எவ்வளவு என்று கேட்ட நியாபகமே இல்லை.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...