"முகில்ம்மா கீழ என்ன பண்றாங்க? சாப்டாங்களா? நான் இப்ப
அவங்கட்ட போணும்!" என்று சொல்லி கீழே கையைக் காட்டியவளின் சிறுபிள்ளைத்தனத்தைப் பார்த்து ஜெயன் லேசாக சிரித்துக் கொண்டு தன்னுடைய தலையைக் கோதிக் கொண்டான்."ஒம்முகில்ம்மா அப்பவே மாத்தரயப் போட்டுட்டு ஒறங்கிட்டாங்க.... அவங்க ரூமுக்குள்ள விடிவெளக்கு தான் எரியுது; எம்பேச்சுல நம்பிக்கையில்லன்னா நீயே கீழ போய் ரூமுக்குள்ள பாத்துட்டு வா!" என்று படிக்கட்டுகளின் பக்கமாக கையைக் காட்டினான் ஜெயன்.
முகிலமுதத்தின் சாப்பாட்டு நேரம், தூங்கும் நேரம், காலையில் அவர்கள் எழுந்து கொள்ளும் நேரம், அவர்களுடைய தோழியிடம் கதையடிக்கும் நேரம், அவரது
பிடித்தங்கள், பிடிக்காத விஷயங்கள் என்று எல்லாமே வந்த இத்தனை மாதங்களுக்குள் வதனிக்கு அத்துப்படி!இன்று அவனை விட்டு எங்கேயாவது தூரமாக ஓட வேண்டுமென்பதற்காக தூங்கிக் கொண்டிருப்பவர்களிடம் போய்ப் பேசப் போகிறேன் என்று சொன்னால் இவளை என்ன செய்வது என்று நினைத்து தான் அவன் சிரித்தான்.
"இங்க வந்து ஒக்காரு வர்த்தினி!" என்று அவன் அமர்ந்திருந்த மொட்டை மாடியின் பக்கவாட்டு சுவரை தட்டிக் காண்பித்தான்.
"இல்ல.... மலையப் பாத்துக்கிட்டு நின்னுட்டே பேசுறேன்; ராத்திரில மாடி சுவத்துல ஒக்கார்றதுக்கு எனக்கு பயமாயிருக்கு! கீழ விழுந்துட்டேன்னா என்ன பண்றது?" என்று சொன்னவளை உன்னை அப்படியா விழ விட்டு விடுவேன் என்று கேட்பது போல
ஒருமாதிரியாக பார்த்தவன், சுவற்றில் இருந்து கீழே குதித்து தரையில் வந்து அமர்ந்து அவளையும் கண்களால் "இங்கு வா" என்று அழைத்தான்."ஒக்காந்து பேசுற அளவுக்கு என்ன இருக்கு? அப்டியே சொல்லுன்னா சொல்ல மாட்டியா?" என்று சின்னக்குரலில் கேட்டவளிடம்,
"இங்க வான்னு கூப்ட்டேன்! வரச் சொல்றதுக்கே என்னைய இவ்ளோ பேச வச்சன்னா என்னால ஒங்கிட்ட கடசிவர இவ்ளோ பொறுமையா பேச முடியாது!" என்று குரலை அழுத்தியவனின் முன்னால் வந்து சற்று பயத்துடனேயே அமர்ந்தாள் வதனி.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...