அன்று ஜெயன் தனக்கு சவாரி எதுவும் இல்லாததால் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து ஒரு ரிஸார்ட்டை சுத்தம் செய்யும் பணிக்காக சென்றிருந்தான். ஒருநாள் பணி முழுவதும் பத்து, பனிரெண்டு மணி நேர வேலை என்பதால் இந்த வேலையில் உழைப்பும் நிறைய இருக்கும்! அதற்கேற்றாற்போல் சம்பளமும் நிறைய இருக்கும்! நஸாரின் மனைவி மரியம் இந்த ரிஸாட்டில் தான் மேனேஜராக பணிபுரிகிறாள்.
வட இந்தியாவில் இருந்த ஒரு பெரிய குடும்பம் இந்தப் பகுதியிலேயே தங்கி, எல்லா இடங்களையும் நிதானமாக கண்டு ரசித்து விட்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஒருவாரத்திற்கு இந்த ரிஸார்ட் முழுவதையும் மொத்தமாக புக் செய்து வைத்திருந்தனர்.
அவர்கள் வருவதற்கு முன் ரிஸார்ட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் துடைத்து வைத்து பளிச்சென இருக்க வேண்டும். அதற்காக தான் மரியம் இந்த இரண்டு ராட்சதர்களையும் வேலைக்கு அழைத்திருந்தாள்.
இப்படி மொத்த வேலை இருக்கும் நேரத்தில் எல்லாம் தன் கணவனையும், ஜெயனையும் உதவிக்கு அழைப்பது அவளுக்கு வாடிக்கை தான்!வெளியே புல்வெளியில் இருந்து உள்ளே உள்ள அறைகள் வரை
மொத்தமே இந்த இடம் இரண்டாயிரம் சதுர அடிகள் தான் இருக்கும். இதை முதலில் ரிஸார்ட் என்று சொல்வதே தவறான வார்த்தை. பத்து கோழிகள், நாலைந்து வாத்துகள், புல்வெளியின் நடுவில் ஒரு கேம்ப் பயர் செட்டப் எல்லாம் இருந்ததால் இந்த ஹோட்டலை அவர்களும் ரிஸார்ட் என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தனர்."இங்கரு நஸாரு; சாயந்தரம் ஆறு மணிக்குள்ள முன்னால கேட்ல இருந்து, பின்னால ரூம்ஸ் வரைக்கும் எல்லாம் பளபளன்னு மின்னனும் தெரியுதா? நீயும் உன் வாப்பா மாதிரி சவுதிக்குப் போயி ஒட்டகம் மேய்க்க மாட்டேன்னு சொன்னயின்னா இப்ப இந்த வேலையச் செய்யி! ஜெயனு அண்ணா நீங்களும் தான்....!" என்று சொன்னவளிடம் தன்னுடைய ஐயாயிரம் ரூபாய் கடனைப் பற்றி நியாபகமாக நினைவு படுத்தினான் ஜெயன்.
"நாங்கொஞ்சம் கறாரான பொம்பள தான்ங்கண்ணா.... ஆனா இன்னிக்கு உங்க கையில சம்பளமா குடுக்கப்போற காசையெல்லாம் புடுங்க மாட்டேன். நீங்களும் என்னிய மாதிரி கட்டு செட்டான ஆளு... ஆனா இந்த நஸாரு அப்டியில்ல; அதுனால தான் அவங்கிட்ட மட்டும் பணத்த தராம அத புடுங்கிக்குறேன். மத்தபடி உங்க கடன் எல்லாம் அவனுக்கும், உங்களுக்கும் நடுவுல இருக்குற விஷயம்!" என்று சொல்லி விட்டு தன்னுடைய கணவனைப் பார்த்து ஒரு முறைப்பை கொடுத்து விட்டுச் சென்றாள் மரியம்.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...