🌻 அழகி 36

303 14 3
                                    

"டேய்.... என்னடா அதுக்குள்ள கெளம்புறேங்குற? ஏதாவது ப்ரச்சனயா? அம்மி ஏதாச்சு சொல்லுச்சா?" என்று கேட்டவனிடம்,

"அதெல்லாம் ஒண்ணுமில்லடா மாப்ள! வர்த்தினி ஏதோ சீக்கிரம் கெளம்பணுங்குது.... அதுக்கு தூக்கம் வருதா வேற வேல எதும் இருக்குதா என்னன்னு தெரியல. நாங்க கெளம்புறோம். நீ மரியம்ட்ட சொல்லிடு!" என்றான் ஜெயன்.

"ரொம்ப நன்றிடா மாப்ள! நீ கூட இருந்ததுனால அம்மி எதுவும் நசநசன்னு படுத்தாம, ஒரு வழியா புள்ளைங்க பொறந்தநாள நல்லா கொண்டாடி முடிச்சாச்சு.... ஆனா, அம்மி நெசமாவே ஒன்னைய, மரியத்த, என்னைய எதுவும் சொல்லலங்குற?" என்று கேட்ட தன்னுடைய நண்பனிடம்,

"சத்தியம் பண்ணாத்தேன் நம்புவியாடா மாப்ள? பாயம்மாவுக்கு இத்தன ஆளுங்கள வீட்ல பாத்ததுலயே மயக்கம் வந்துருக்கும்; கேக்கு, சாப்பாடு இதெல்லாம் பாத்து மூச்சே அடைச்சிருக்கும்! இதுக்கு மேல நம்மள திட்டுறதுக்கெல்லாம் எங்கடா அவங்க வாயத் தெறக்குறது? நீ ஒரு நாலஞ்சுநா மரியத்த பத்திரமா பாத்துக்க. மொத்த கோவத்தையும் உங்கம்மா அந்தப்புள்ள மேல எறிக்கிறாம....!" என்று சொன்னவனிடம் "சரிடா பாத்துக்குறேன்!" என்று சொல்லி தலையாட்டினான் நஸார்.

ஜெயன் கிளம்பும் போது  பின்னாலேயே ஓடி வந்து அவன் கொடுத்த தங்களுடைய கிப்ட் பார்சலின் உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்ட ஹசன் மற்றும் ஃபைசலிடம் அம்மியும் அபுவும் சொல்லும் போது தான் அதைப் பிரிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு அனிஷாவிடமும் அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது உனக்கு ஒரு நல்ல போர்டு விளையாட்டு செட்டை வாங்கி வருகிறேன் என்று சொல்லவும் அந்தக் குழந்தையும் மகிழ்ந்து தலையாட்டி விட்டு சென்றாள்.

சதுரங்கம், லூடோ, சைனீஸ் செக்கர்ஸ், பிஸினஸ் என்ற வகையிலான அமர்ந்து அறிவை உபயோகித்து விளையாடும் விளையாட்டுகள் அனிஷாவின் விருப்பம். ஹசனுக்கும், ஃபைசலுக்கும் தங்கள் விளையாட்டுப் பொருளுடன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தக் குழந்தையை மறந்துவிட்டோமே என்று இங்கு வந்த பிறகு தான் ஜெயனுக்கு உரைத்தது. அதை அவளிடமே பேசி தெளிவும் படுத்திக் கொண்ட பின்பு தான் மரியத்தை கண்களால் தேடி அவளிடம் ஒரு தலையசைவுடன் அங்கிருந்து கிளம்பினான்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now