ஜெயனும், வதனியும் பிறந்தநாள்
விழாவிற்கு சென்ற போது
நஸாருடைய வீட்டில் அவனுடைய
மகன்கள் ஹசன், ஃபைசல் இருவரும் தங்களுடைய முன்பாக இருந்த ஒரே மாதிரியான இரண்டு கேக்குகளில் இருந்த மெழுகுவர்த்திகளை ஊதி கேக்குகளை வெட்டினர்.தம்பிகளுக்கு உதவியாக நடுவில் நஸாருடைய மகள் அனிஷா நின்று கொண்டு தன்னுடைய தம்பிகளுக்கு கேக்கை வெட்ட உதவி செய்து கொண்டிருந்தாள்.
வொய்ன் சிவப்பில் ஏஞ்சல் ஃப்ராக் அணிந்து நின்றிருந்த மகளையும், இளநீலம் மற்றும் கருநீலமும் கலந்த சூட் கோட்டில் நின்றிருந்த மகன்களையும் கண்டு அவர்களின் உடைத்தேர்வு மிகவும் அழகாக இருப்பதாக சொல்லி மரியத்திடம் விரலால் "சூப்பர்" என சைகை காட்டினான் நஸார்.
கணவன் தன்னிடம் இவ்வளவு அன்பும் அனுசரணையும் காட்டுவதால் தான் தன்னால் தன்னுடைய புகுந்த வீட்டில் நிறைய சவால்களை எளிதாக கடந்து செல்ல முடிகிறது என்று நினைத்துக் கொண்ட மரியம் சிரிப்புடன் அவனிடம் தலையசைத்து விட்டு வந்திருந்த நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
இரட்டையரின் பிறந்த நாள் என்று அவர்களுடைய வீட்டிற்கு வதனியும் ஜெயனுமாகப் போய் மரியம், நஸார் இருவரிடமும் பேசி, தங்களுடைய பரிசை பிள்ளைகளிடம் கொடுத்து விட்டு, பிறந்தநாள் விழாவிற்கு வந்தவர்களை கவனித்து, அவர்கள் கொடுத்த பரிசுகளை வாங்கி அறையில் அடுக்கி வைத்து, அவர்களை சாப்பிட அனுப்பும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
"என்னடா..... மேடம் ஒம்பக்கமே திரும்பாம அவுங்க பாட்டுக்கு வந்துட்டும், போயிட்டும் இருக்காங்க. என்னத்தயாவது குட்டைய கொழப்பி உட்டியா?" என்று ஜெயனின் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி கேட்டவனிடம்,
"ஏன்டாலேய்..... அவனவன் வேலைய பாக்காம, அடுத்தவிய்ங்கள தான் பாத்துட்டே திரிவிங்களாடா? அஸிஸ்டெண்ட் மேனேஜர் அதான் என்னோட வீட்ல இருக்குற ஏஎம் அம்மா எங்க போனா என்ன? வந்தா ஒனக்கென்ன?"
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...