அன்று முழுவதும் உட்கார கூட நேரமில்லாமல் புதர் போல் மண்டியிருந்த புற்களை வெட்டி, வீட்டின் வெளிப்புற கேட்டில் இருந்து வீட்டின் வாசற்புறம் வரை உள்ள பாதையை பைப் கொண்டு தண்ணீர் விட்டு கழுவி, ஸ்விம்மிங் பூலின் பாசம் படிந்த டைல்ஸ்களை எல்லாம் சோப் போட்டு கழுவி, வீட்டைச் சுற்றியும் வாய்க்கால் போல் சிறிதாக தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் பகுதிகளுக்கு எல்லாம் ப்ளீச்சீங் பவுடர் போட்டு கழுவி சற்றே மூடி அடித்த வெயில் விழ விட்டவன் அந்த வீட்டின் காவலாளியையும் திட்டுவதற்கு மறக்கவில்லை.
"யோவ் நிக்கலஸ்ஸூ.... என்னய்யா வீட்டுக்கு வெளிய லான் ஏரியாவுல எங்க பாத்தாலும் வெத்தல கறையாக்கி வச்சுருக்க? இதுவே உன் வீடா இருந்தா இப்டி கண்டபடி துப்பியிருப்பியா? ஏன்யா என்ன வேல பண்ணி வைக்குறன்னு
ஒம்பொண்டாட்டி ஒஞ்சட்டயப்புடிச்சு கேக்காது?" என்று வாய் வலிக்க ரெண்டு திட்டு திட்டிய ஜெயனுக்கு இன்னும் குறுக்கு ஒடிந்து போகும் அளவிற்கு வேலைகள் குவிந்து கிடந்தன.இரண்டு நாட்கள் வெளிப்புற வேலைகளை ஒழுங்கு படுத்தி முடித்து விட்டுத் தான் பிறகு வீட்டிற்குள் இருக்கும் வேலைகளையே தொட வேண்டும் என்று நினைத்திருந்தவன், தன்னுடைய அயராத வேலைகளுக்கு நடுவிலும் வதனியின் சிறு சிரிப்புடன் கூடிய தலையாட்டலையே சப்பென்ற சாதத்துக்கு சுருக்கென்று தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போல நினைத்துக் கொண்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.
இரவு எட்டு மணியளவில் முதுகைப் பிடித்துக் கொண்டு உடலை அப்படியும் இப்படியுமாக நெளித்துக் கொண்டிருந்தவனிடம்,
"ஒரு கட்டிங் அடிச்சா இப்டி ஒடம்பு நோவுதுன்னு உருட்டிக்கிட்டு இருப்பியா நீயி? வெறும் பாலக் குடிச்சுட்டு, எப்டித்தான் இப்டி பேயி புடிச்சவன் கணக்கா வேல பாக்குறியோ தெரியல...... இங்க வா ஜெயனு, வந்து ஒக்காந்து மொதல்ல சாப்பாட்ட சாப்ட்டு முடி! நானே ஒனக்கு ராச்சாப்பாட்டுக்கு பார்சலும் வாங்கிட்டு வந்துட்டேன்;
நாலர மணிக்கு ரெண்டு பன்ன சாப்டவன்....... அதுக்கு அப்புறம் எங்கிட்ட ஒண்ணுமே வாங்கிட்டு வரச் சொல்லலியே? இவ்ள நேரமாச்சு; மொத வயித்த கவனிய்யா!" என்று சொல்லி விட்டு அவனிடம் அவனுடைய இரவு உணவு பார்சலை நீட்டினார் அந்த வீட்டின் காவல்காரர் நிக்கோலெஸ்.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...