🌻 அழகி 31

279 12 1
                                    

நான்கு மாதங்களில் இந்த மாதிரியான சுமூகமான வாழ்க்கைமுறையை மட்டுமே அவர்கள் சந்திக்கவில்லை. சில பல இடர்களும் நேர்ந்தது. அந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயன் வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்ததால் மேலே ஏறிச் சென்று,

"ஏங்க மேடம்! தயிர், பாலாடை, கடலமாவு, அரிசி மாவு இந்த மாதிரி
வெள்ளயா இருக்குற ஐயிட்டத்த எல்லாம் சேத்துப் பூசி என்னைய கொஞ்சம் வெள்ளையாக்கி உட்டா என்னங்க? எனக்கு குடுத்த வாக்க காப்பாத்தாம நீங்க மட்டும் அந்த பேக்கு, இந்த பேக்குன்னு ஒளிச்சு ஒளிச்சு வச்சு செஞ்சு மொகத்துல பூசிக்குறீங்க?" என்று கேட்டு அவளாகவே வீட்டில் சில பொருட்களை வைத்து தயாரித்த பேஸ்பேக்கில் கொஞ்சம் பங்கு கேட்டு அதை அவனுடைய முகத்தில் பூசிக் கொண்டு அங்கேயே படுத்திருந்தான்.

இதெல்லாம் அவளை சந்திக்க செல்வதற்கான சாக்குகளில் ஒரு வகை தான்.... இருந்தாலும் இப்போது அவள் இதெயெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஜெயன் அவன் நினைத்த நேரத்திற்கு வதனியுடைய பகுதியில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தான். அப்போது வர்த்தினியின் இளைய சகோதரன் அவளுக்கு அலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்திருந்தான்.

"ஹலோ அருண்.... எப்டிப்பா இருக்க? உங்க பேமிலியில எல்லாரும் நல்லாயிருக்காங்களா?" என்று கேட்டவளிடம் தலையை தூக்கிப் பார்த்தவன் யாரென்று வதனியிடம் கண் ஜாடையால் கேள்வி கேட்டான்.

அவளுக்கு ஒரு தம்பியும், தங்கையும் இருக்கிறார்கள் என்று தெரியும்! இந்த அருண் தான் அவளுடைய தம்பி என்று தெரியாது அவனுக்கு!

"பேசுறது என்னோட தம்பி ஜெயன்!
நான் கொஞ்ச நேரம் வெளிய போயி அவர் கூட பேசிட்டு வர்றேன்!  நீ இரு!" என்று ஜெயனிடம் சொன்னவள் அவளுடைய போர்ஷனுக்கு வெளியில் சென்று மொட்டைமாடியில் நின்று கொண்டு அவளை அழைத்தவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"ஓடிட்டாளா? நம்ம விஷயத்த எல்லாம் ஒண்ணுவிடாம
இவ கிட்ட தான் மொதல்ல ஓடியாந்து ஒப்பிக்கிறோம்.... ஆனா இவ மட்டும் இன்னும் இவ குடும்ப விஷயத்த எல்லாம் ரகசியமாத்தான் வச்சுக்கிட்டு இருக்கா!" என்று முணங்கியவன் முகத்திற்கு கிடைத்த பேஸ்பேக்கின் குளிர்ச்சியினால் கண்கள் சொருகி இப்போது நான் தூக்கத்திற்கு செல்லப்போகிறேன் என்ற நிலையில் இருந்தான்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now