"ஏய்... என்ன? ஒழுங்கா படியில ஏறி வர மாட்டியா நீயி? அதுக்கு கூடவா வலிக்குது ஒனக்கு?" என்று முயன்று அவளிடம் சிரித்தவனிடம் ஒரு பெருமூச்சுடன்,
"ஆமா.... வலிக்குது! தூக்கிட்டுப் போ! கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் என்னைய கீழ இருந்து மேல வரைக்கும் தூக்கிட்டு வந்த..... ஏன் இப்ப செய்ய மாட்டியா?" என்றாள் விரித்த கைகளை கீழே இறக்காமல்.
"செய்ய மாட்டேன்னு யாரு சொன்னது? நான் வருத்தமா இருக்கேன்னு நெனச்சு என்னிய சமாதானம் பண்றதுக்காக தான் நீ இதக் கேக்குறியோன்னு தோணுச்சு!" என்று சொன்னவனுடைய முகத்தை ஏறிட்டவள்,
"ஷ....ப்பா! என்னைய தூக்கிட்டு நடன்னு சொல்றதுக்கு நா உங்கிட்ட இவ்ளோ நேரம் பேசணும்னா, அது எனக்கு வேண்டவே வேண்டாம். உங்கூட இப்டி போராடுறதுக்கே சாப்ட முட்டதோசையெல்லாம் டைஜெஸ்ட் ஆகிடும் போலிருக்கு! தள்ளு; நானே போய்க்குறேன் மேல.....!" என்று சொன்னவளுக்கு வழியை விடாமல் அவளருகில் வந்தவன் அவளுடைய இரு அக்குளுக்கு அடியிலும் கைகொடுத்து அவளுடைய உடலை தூக்கி தொடையை இறுக்கிப் பிடித்து தன்னுடைய வயிற்றில் இறுக்கிக் கொண்டான்.
"ஹையோ.... இது நல்லாயிருக்கே! குழந்தைங்க அவங்களோட டெட்டி பியரெல்லாம் தூக்குவாங்கல்ல... அந்த மாதிரி ரொம்ப கம்பர்டபிளா இருக்குது புருஷா! மேல போனவுடனே எறக்கி விட்ராத!" என்று சொல்லி அவனுடைய தோள்பட்டையை இறுக்கிக் கொண்டவளிடம்,
"பெறவு.... எப்ப எறக்கி உடணும்? கழுத்தப் புடிச்சு தொங்குறதுக்கு நீ இன்னொன்ன பெத்துக் குடுத்ததுக்கு அப்புறமா வேணும்னா எறக்கி உடட்டா? நெஜமா ஒனக்கு இன்னிக்கே எல்லாத்துக்கும் சம்மதந்தானா?" என்று கேட்டவனுடைய இடப்பக்க மார்பில் தன்னுடைய பற்தடத்தை பதித்தாள் வர்த்தினி.
"........ஷ்.... ஏய்.... பேசிக்கிட்டு இருக்கும் போதே எதுக்குடீ கடிச்சு வச்ச? வலிக்குது எனக்கு....!" என்று வலியில் முகத்தை சுளித்த படி மார்பை தடவிக் கொண்டவன், அவன் இடுப்பில் இடுக்கிக் கொண்டிருந்த தலையணைகள் இரண்டையும் கீழே போட்டான்.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...