🌻 அழகி 25

310 12 1
                                    

"இதயே எங்கிட்ட எத்தன வாட்டி எத்தன விதமா திருப்பி திருப்பி சொல்லுவம்மா நீயி? ஒன்னைய பொறுத்தவரைக்கும் நா உனக்கு பாத்தா லேசா சிரிச்சு வணக்கம் சொல்ற மாதிரியான ஒரு உறவு; ஆனா என்னையப் பொறுத்தவரையில நீ இத்தன வருஷமா நாம இவளத் தான்டா தேடிக்கிட்டு இருந்தோம்ங்குற நெனப்ப குடுத்த பொண்ணு; நம்ம ரெண்டு பேரும் நம்மளோட அபிப்பிராயத்துல இருந்து மாற வேண்டாம்; நெதமும் ஏதாவது ஆச்சரியத்த ஒளிச்சு வச்சுருக்குற இந்த வாழ்க்கை ஒன்னையும் என்னையும் என்னிக்காவது பக்கத்துல கொண்டு வருதான்னு கொஞ்சம் பொறுத்துருந்து பாப்போம்மா!" என்று சொன்னவனிடம் பதிலேதும் பேசாமல் வெளியே காரின் வேகத்திற்கு ஏற்றாற்போல ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் வதனி.

கார் அவலாஞ்சியை அடைந்த போதும் அப்படியே தான் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு
இருந்தாள். அதிகமாக மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் ஜெயன் ரோட்டை விட்டு காரை இறக்கி சற்று ஓரமாக ஒதுக்கி நிறுத்தினான்.

"கார ஏன் இப்டி நிப்பாட்டுற?
கொஞ்சம் பள்ளத்துல போயிருச்சு போலிருக்கே..... திரும்ப எடுக்கும் போது ஏறிடுமா?" என்று காரைப் பார்த்த படியே யோசனையாக அவளிடம் கேட்டவளைப் பார்த்து ஏனோ சிரிப்பு தான் வந்தது அவனுக்கு!

"ஏறலையின்னா ஒன்னைய தள்ளி விடச் சொல்ல மாட்டேன்! இந்த காரோட மொதலாளி ஒரு இத்துப்போனவன் இருக்கான்ல,  அவன கூப்ட்டுக்குறேன்! வா!" என்று சொல்ல அவனுடன் நடந்தாள் வதனி.

"ச்சீ....ச்சீ! கார் ட்ரைவரா ம்ஹூம் இந்த மாப்ள எனக்கு வேணாம்!" என்று தனக்கு பார்த்த ஏதோ ஒரு பெண் சொன்னதாக நியாபகம் இப்போது சம்பந்தமே இல்லாமல்  நினைவிற்கு வந்தது அவனுக்கு!

கொஞ்சம் சீரியஸாக பேசிய நேரம் போக இன்று காரில் ஏறியதிலிருந்து இதுபோலவே குழந்தைத்தனமான மூன்று சந்தேகங்கள் கேட்டு விட்டாள்.

"ஏன் ஜெயன்..... ட்ரிப்ல இருக்கும் போது உனக்கு திடீர்னு தலவலி, வயிறுவலி, காதுவலியெல்லாம் என்ன பண்ணுவ?" என்று கேட்டவளிடம்,

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now