🌻 அழகி 29

263 12 1
                                    

அன்று வதனிக்கு இந்த ஊரில் அவளுடைய ஐந்தாவது மாத சம்பளம் க்ரெடிட் ஆகியிருந்தது. இந்த மாத சம்பளத்தில் கொஞ்சம் பெரிய தொகையை அப்படியே ஜெயனுக்கும், முகில்ம்மாவிற்கும் செலவு செய்வதற்காக  ஒதுக்கி வைத்திருந்தாள் வதனி.

"நீ காச ஒதுக்கி வச்சதெல்லாம் சரித்தான்; அத நா ஒன்னைய செலவு செய்ய உட்டாத்தான?" என்று கண்களைச் சுருக்கிய படியே அவன் பேசுவது போல ஒரு எண்ணம் தோன்ற லேசாக சிரித்துக் கொண்டாள்.

முகில்ம்மாவிற்காவது அவர்கள் விரும்பும் நிறத்தில் ஒரு பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்து விடலாம்; அவனுக்குத்தான் என்ன வாங்குவதென்று எப்படி யோசித்துப் பார்த்தும் அவளுக்குத் தெரியவில்லை.

அவனை மறுப்பு சொல்லாமல் தன்னுடைய பரிசை வாங்க வைக்க வேண்டுமென்றால் அவனுக்கு
கன்சீலர், பவுண்டேஷன், மஸ்காரா என்ற பொருட்கள் அடங்கிய முழுமையான ஒரு மேக்கப் டப்பாவை தான் பரிசாக தர வேண்டும் என்று நினைத்து அதற்கும் சிரித்துக் கொண்டாள்.

ஜெயனுக்கு மேக்கப் எதற்காக வேண்டும் என்ற காரணத்தையும் ஒருநாள் அவளுடைய வீட்டில் இருந்த போது தான் தெரிந்து கொண்டாள்.

ஒரு ஞாயிறன்று காலையில் குளியலறையில் இருந்து அவள்  வெளியே வந்த போது ஜெயன் அவளது அறையில் நின்று கொண்டிருந்தான். எப்போதும் வதனிக்கு குளிப்பதற்கு மட்டும் அரைமணி நேரமாவது ஆகும். அவள் குளியலறைக்குள் சென்றால் என்றால் நாற்பது நிமிடங்களுக்கு குறைவாக வெளியே தலைநீட்ட மாட்டாள்.

அவள் குளியலறைக்குள் செல்வதற்காகவே காதை தீட்டி வைத்துக் கொண்டு காத்திருந்து, அவள் குளிக்க உள்ளே சென்றதும் அவளது ஹாலுக்குள் மெதுவான காலடித்தடங்களுடன் நுழைந்தான் ஜெயன்.

அன்று குளிப்பதற்கு சற்று சோம்பேறித்தனமாக இருந்ததால் பல் மட்டும் துலக்கி விட்டு முகத்தை துவாலையால் துடைத்துக் கொண்டே வெளியே வந்திருந்தாள் வதனி.

இவ்வளவு சீக்கிரத்தில்
திடீரென அவள் வெளியே வருவாள் என்று எதிர்பார்க்காதவன் போல
முகமெல்லாம் வியர்த்து திருடன் போல் அவளைப் பார்த்து முழித்த படி நின்றிருந்தான்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Tempat cerita menjadi hidup. Temukan sekarang