மலைப்பகுதியில் நடுநாயகமாக அமைந்த அந்த ரிஸாட்டிற்குள் வலப்புறமாக சென்று இடப்புறமாக திரும்பி வந்து விடலாம் என்ற அமைப்பு இருந்தது. வலப்புறம் முழுவதும் விருந்தினர் அறைகள், ரிஷப்ஷன் ஏரியா, சமையல் அறை, டைனிங் என்று வைத்திருந்தவர்கள், டைனிங் ஏரியா வழியாக வெளியேறியதும் இடப்புறமாக சின்னதாக ஒரு அருவி, அதற்குப்பின் வெட்டவெளியில் வாக்கிங் ஏரியா, ஸ்விம்மிங்பூல், கடைசியாக கார்களுக்கான பார்க்கிங் என்று பிரித்திருந்தனர்.
ரிஸார்ட்டின் நேம் போர்டு வைத்திருந்த பவுண்டேன் பக்கத்தில் இருந்து நடக்க ஆரம்பித்து பெரிதாக ஒரு பூஜ்ஜிய வடிவில் அல்லது ஆங்கில எழுத்து O வடிவில் நடந்தால் அந்த ரிஸார்ட் முழுவதையும் பார்த்து விடலாம் போல இருந்தது.
அச்சுதனுடைய குடும்பத்தினர் அனைவருடனும் ஜெயன், வதனி, முகிலமுதம் மூவரும் இணைந்து அமர்ந்திருந்தனர். அவர்களுடைய பெரிய குடும்பத்தினருடன் இவர்கள் மூவரும் சேர்ந்து, அந்த மகிழ்ச்சிகரமான குடும்பத்தினருடன் வரவேற்பு பானம் அருந்திக் கொண்டிருந்தனர்.
"இங்க Ambience ஏ ரொம்ப ரிச்சா தெரியுதே? இந்த ரிஸார்ட் மரியம் வொர்க் பண்றத விட அளவுல பெருசோ ஜெயன்?" என்று கேட்ட வதனியிடம் தலையை ஆட்டி,
"ஆமா.... இடத்துலயும் பெரிசு! செலவுலயும் பெரிசு! பாத்தல்ல..... அச்சுதன் ஸார் குடும்பத்த தவிர இங்க நாலஞ்சு ரூம்பு தான் புக் ஆகியிருக்குது போல..... அதான் இங்க சாப்ட நம்மள தவிர ஒருத்தரையும் காணும்!" என்று வதனியுடைய காதில் மெல்ல ரகசியம் பேசியதோடு
பேச்சை முடித்துக் கொண்டான் ஜெயன்."எலேய்..... இங்க வர்றவங்க ஊரச் சுத்திப் பாக்கத்தானடா இந்த ஊருக்கு வர்றாங்க..... அவங்க தங்குறதுக்கு மட்டுமா எதுக்குடா இத்தாம்பெரிசா எடம்? அதுவுமில்லாம கொட்டுற பனியில நீச்சக்கொளத்த வேற கட்டி வச்சுருக்கானுவ?" என்று ஆச்சரியமாக கேட்ட தன்னுடைய அன்னையிடம் மெல்லிய குரலில்,
"இங்கரு அமுதாம்மா..... அவிய்ங்க இங்க வந்து தங்குறதுக்கு நீயா காசு குடுக்குற? இந்த மாதிரி எடத்த வச்சுத்தான் இந்த ஊருல எங்கள மாதிரி பல பேருக்கு வாழ்க்கப்பாடே ஓடிக்கிட்டு இருக்கு.... நீ இப்டியெல்லாம் சந்தேகம் கேட்டு நம்ம பொழப்புக்கு நீயே வேட்டு வச்சுடுவ போலிருக்கு! அங்கிட்டு இங்கிட்டு சுத்தி பராக்கு பாரு; ஆனா இன்னொரு க்ளாஸூ ஜுஸூ கெடக்குமான்னெல்லாம் கேட்ராத சரியா?" என்று சொல்லி அவர்களை அதட்டினான்.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...