"ஜெயனு.... கோவிலுக்குப் போயிட்டு அப்புறமா வீட்டுக்கு போலாமுடா!" என்று சொன்ன தாயிடம்,
"கண்டிப்பா கோவிலுக்குலா போகணுமா அமுதாம்மா.... அவ கோவிலுக்குன்னு சொன்னாலே மூஞ்சிய தூக்குவாளே?" என்று யோசனைக் குரலில் பேசினான் ஜெயன்.
"அதெல்லாங்கெடையாது ஜெயனு.... மத்த நாளுன்னாவாச்சு பரவாயில்ல, போவுதுன்னு உட்டுடலாம்; வந்துருந்தவிய்ங்கள்ல பாதி பேரு ஒன்னைய பாத்து
ஆ ன்னு வாயப் பொளந்துச்சுக.... மீதி பேரு வதனிப்புள்ளய பாத்து பெருமூச்சு உட்டுச்சுக! நம்ம பேங்க்கு ஸாரு பேசுனத கூட கேட்டுப்புட்டு ரெண்டு பேரு கொமட்டுல கைய வச்சுக்குடுச்சுக!""அதுக கண்ணெல்லாம் கரிஞ்சு போவ.... எனக்குத் தெரியாது! கோயிலுக்குப் போயே ஆவணும். வழக்கம்போல நீ அவ கிட்ட போயி ஏதாவது கத சொல்லி அவள மேல இருந்து எறக்கி கூட்டியா!" என்று சொன்னவரை ஒருமாதிரியாக முறைத்தவன்,
"லூசம்மா.... அவ எங்க மேல இருக்கா? ரூமுக்குள்ளார இல்ல இருக்கா?" என்று கேட்டான்.
"இ...ஹி! ஆமால்ல.... நம்ம வீட்ல சொல்லி சொல்லி எனக்கு அது அப்டியே பழக்கமாயிடுச்சுடா ஜெயனு.... சிறுசுக ரெண்டும் கொஞ்சம் அனத்த ஆரம்பிச்சதால மரியம் கெளம்பிட்டா; ஒங்கிட்ட சொல்லிடச் சொன்னா..... நஸாரு எங்கள வீட்ல எறக்கி உட்டுட்டு போறேன்னு சொல்லிட்டு மண்டபத்துல எல்லாருக்கும் செட்டில் பண்ணிக்கிட்டு இருக்கான்! அவேங்கிட்ட நீதானய்யா காச குடுத்து உட்ட?" என்று கேட்டவரிடம்,
"ஆமா.... அமுதாம்மா! மொத்த ஸெட்டுக்கும் ரெண்டுநா லீவு உடச் சொல்லி, அவனையும் கூடவே இழுத்துப் புடிச்சு வச்சுருக்கோம். அவேன் எனக்கு செய்யுற இந்த சகாயமே ரொம்ப பெரிசு..... நம்ம அவலாஞ்சி பெர்சு, நஸாரு கிட்ட எல்லாம் நா செய்முறய எதிர்பாக்கல அமுதாம்மா! நிக்கலசுன்னு ஒரு பெர்சு லவ்டேலுல இருக்குது.... அந்த ஆளு கிட்டயும் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தாக்கல் சொல்லிட்டு ஏதாவது வாங்கித் தரணும் அமுதாம்மா!" என்று சொன்னவனிடம்,
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...