"நாங்க வெறும் சாதாரண எம்ப்ளாயீஸ் தான் சிஸ்டர்! நார்ம்ஸ் என்ன சொல்லுதோ, அத தான் நாங்க கேட்டு நடக்க முடியும்! ஆனானப்பட்ட இராவணன்ங்குற ஒரு பெரிய இலங்கையோட ராஜாவையே அவர் வருத்தமா இருந்தப்போ கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்னு தான் ஒரு ஃப்ரேஸ் சொல்லியிருக்காங்க. அப்ப கடன்ங்குறது எவ்வளவு பவர்ஃபுல்லான ஒரு விஷயம்னு யோசிங்க.....!"
"பட் நஸார் ஸார்! இப்டி உங்களோட டெவலப்மெண்ட் பத்தி ரொம்ப கவலைப்படுற ஒரு வொய்ஃப் கெடச்சதுக்கு நீங்க குடுத்து வச்சுருக்கணும்!" என்றாள் வதனி கணவன் மனைவி இருவரையும் மெல்லிய புன்னகையுடன் பார்த்தபடி.
"ஆமா! ஆமா..... மரியம்ட்ட மாப்ள நெறய குடுத்து தான் வச்சிருக்கான்!" என்று கிண்டல் செய்தவனை முறைத்த மரியம்,
"நீ சும்மாயிரு ஜெயனுண்ணே! எனக்கு நீ ஏத்துக்கிட்டும் பேசுவ; சமயத்துல என்னிய வாரவும் செய்யுவ! இவங்கையில இருந்து காச வாங்குறது என்ன அவ்ளோ சூளுவுன்னா நெனச்சா? யப்பா எமகாதகன்; எங்கிட்ட குடுக்க கூடாதுன்னு சொல்லிட்டு வவுச்சர் புக்கு பின்னாடியெல்லாம் காச ஒளிச்சு வச்சுருப்பான்.... ஆனா நான் அவன் ஒளிச்சு வச்ச காசு எல்லாத்தையும் கண்டுபுடிச்சுடுவேனே?" என்று சொன்னவளின் தோளை சுற்றி தன் கையைப் போட்டு அணைத்துக் கொண்டான் நஸார்.
மரியம் சொன்ன சில வார்த்தைகள் அவனை அவனுடைய பதின்பருவத்திற்கு கொண்டு சென்று விட்டது
விடலைப்பையனாயிருக்கும் போதும் இப்படித்தான்..... மரியம் அணியும் பாவாடை சட்டைகளில் உள்ள பட்டன்கள் இரண்டு, மூன்றை சத்தமில்லாமல் திருடி தன் ஜோபில் வைத்துக் கொண்டு அவளை அவளது அன்னையிடம் உதடுபிதுக்கி அழ வைப்பான்.
"ஏய் சிமிட்டி! இங்க வாடீ..... உன் பட்டன் எங்கிட்ட தான் இருக்கு! அது ஒனக்கு வேணுமின்னா மாமாவுக்கு
ஒரு முத்தம் குடுத்துட்டு உன் பட்டன வாங்கிட்டுப் போ!" என்று தனியே அழைத்து வம்பிழுப்பவன் அருகில் வருபவள் அவனுடைய சட்டைப்பை, பேண்ட் பாக்கெட், சில நேரங்களில் அவனுடைய இடுப்பு தாயத்து வரை தடவி தன்னுடைய தொலைந்த பட்டனை மீட்டு விடுவாளே தவிர அவன் கேட்ட முத்தமெல்லாம் அவனுக்கு அவளிடமிருந்து என்றுமே கிடைத்ததில்லை.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...