"இப்பல்லாம் வினு எங்கூட பேசவே மாட்டேங்குறான் ஜெயன்!" என்று சொல்லியிருந்தவளின் வார்த்தைகளை அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்தவன் அவளது பேச்சில் சற்றே திகைத்து தான் போயிருந்தான்.
"இவளுக்கு என்ன ஆச்சு? அவன் தான் போயிட்டானே? அவன் எப்டி இவ கூட பேச முடியும்? இப்பல்லாம் பேச மாட்டேங்குறான்னு வேற சொல்றா..... எதுக்கு இப்டி பேசுறான்னு புரியலயே?" என்று நினைத்துக் கொண்டு அவளிடம் பதிலேதும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
"இறந்து போயிட்டவன் எப்டிடா வர்த்தினி கூட பேசுவான்.....? என்னடா இவ லூசு மாதிரி எதையோ உளறுறாளேன்னு நெனைக்கிறியா ஜெயன்?" என்று கேட்டவளிடம்,
"இல்லம்மா.... நான் அப்டியெல்லாம்!" என்று பேசிக் கொண்டிருந்தவனை மேலும் பேச விடாமல் நிறுத்தியவள்,
"இல்லன்னு பொய் சொல்லாத!
நீ அப்டித்தான் நெனச்சுருப்ப ஜெயன்; எனக்குத் தெரியும்! என்ன மாதிரி நேரத்துல நீ எப்டி எப்டி பேசுவ, என்ன நெனப்பேன்னு என்னால நல்லாவே கெஸ் பண்ண முடியும்!""உன்னோடது மாதிரியே தான் வினுவோட மூடுக்கேத்த பேச்சையும் என்னால கெஸ் பண்ண முடியும். அவன் எங்கிட்ட பேசுறது மாதிரி அவனோட வாய்ஸ்ல நானா எனக்கான பதில யோசிச்சுக்குவேன். அதுக்காக நான் லூசோன்னு நெனச்சு பயப்படாத ஜெயன்; இது சும்மா ஒரு பழக்கம் அவ்ளோதான்.....!"
"உன் பின்னாலயே சுத்திட்டு இருக்குறதால இப்பல்லாம் நீ என்ன செய்வ, என்ன பேசுவ, என்ன யோசிப்பன்னு நெனச்சுட்டே இருக்கேன். ஸோ எனக்கு வினுவோட வாய்ஸ் மனசுக்குள்ள கேக்க மாட்டேங்குது ஜெயன்!" என்று சொன்னவளின் பேச்சை முழுதாக நம்ப முடியாமல்,
"வர்த்......தினி! என்னடீ சொல்ற? அப்ப அவனுக்குப் பதிலா இப்ப நாந்தான் உன் மனசுல இருக்கேங்குறியா? எப்டி யோசிச்சுப் பாத்தாலும் நீ சொன்ன வார்த்தைக்கு இந்த அர்த்தந்தா வருது!" என்று அவளிடம் அவசரக்குரலில் கேட்டான் ஜெயன்.
அவளுடைய அம்மா, வினோத் இவர்கள் இருவரும் இல்லாமல் தனிமையிலேயே இருந்து இப்படி புதுவிதமான நோய் ஒன்றை வளர்த்து வைத்திருக்கிறாளே என்ற வருத்தம் ஏற்பட்டிருந்தாலும், அவள் சொன்ன அடுத்த விஷயம் இந்த வருத்தத்தை மிகவும் சின்னதாக்கி இருந்தது.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...