"டேய் மச்சி..... என்னடா அந்தப்புள்ள கிட்ட போயிட்டு,
இப்டி பேசிட்டு வந்துருக்க.....?
லவ் பண்ணு, லவ் பண்ணுன்னு ஒரு பொண்ணு மேல உழுந்து அதப் போட்டு பொராண்டுறது ரொம்பவே தப்புடா! அவ மனநிலையில நாம இருந்தா என்ன செய்வம்னு யோசிச்சுப் பாத்தியா நீயி? அந்தப்பொண்ணுட்ட இன்னுங்கொஞ்சம் பொறுமையா பேசி, ஒம்மனச புரிய வைடா!" என்று மாங்கு மாங்கென தனக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தவனின் பேச்சை தன் காதிலேயே ஏற்றிக் கொள்ளாதவன் போல் அருமை நண்பனுக்கு எதிரில் அமர்ந்து தன்னுடைய காதைக் குடைந்து கொண்டிருந்தான் ஜெயன்."அடேய்.... இவனே! நான் உங்கிட்ட தான்டா பேசிக்கிட்டு இருக்கேன்!" என்று சொன்ன நஸாரிடம்,
"அப்டியா.....? எங்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கியா? என்ன சொல்லிக்கிட்டு இருந்த?" என்று உன் பேச்சில் ரிவர்ஸ் போய் விட்டு மறுபடியும் முதலில் இருந்து வாவென்று சொன்ன ஜெயனை இரண்டு மூன்று கெட்ட வார்த்தைகளால் திட்டினான் நஸார்.
"டேய்.... இதெல்லாம் நல்லாயில்ல; நீ இப்டி எல்லாம் பேசுறத நான்
உம்பொண்டாட்டி கிட்ட போட்டு குடுத்துவேன் பாத்துக்க!" என்று சிறுபிள்ளைத்தனமாக மிரட்டியவனிடம் எரிச்சலுடன்,"ஐயோ.... கொஞ்ச நேரம் வெளையாடாம அடுத்து என்ன செய்றதுங்கறத பத்தி பேசித் தொலையேன்டா ஜெயனு!" என்றான் நஸார்.
"இங்கருடா நஸாரு; இந்த அழுமூஞ்சிங்கள எல்லாம் கண்டாலே நமக்கு ஒவ்வாம; கிள்ளி விட்டு அடுத்தவிய்ங்கள வேணும்னா அழுவ வப்பமே தவிர நமக்கெல்லாம் சோகமா கன்னத்துல கைய வச்சுக்கிட்டு ஒக்காந்துருக்குறது, காதலுக்காக அழுது தவிக்குறது இதெல்லாம் வரவே வராது பாத்துக்க!"
"அவளோட மனநிலையில நாம இருந்தா என்ன செய்வம்னு கேட்டல்ல? ரெண்டு நாள் அந்தப் பொண்ணுக்காக அழுவோம். மூணாவது நாள் எந்தப்பிள்ள நம்மள கட்டிக்கிடுறேன்னு சொல்லுதோ அந்தப் புள்ளையோட நல்லாத்தே வாழ்ந்துக்கிட்டு இருப்போம். உணர்வுகள் அழுத்தமா இருக்குறதும், ஆழமா இருக்குறதும் பொண்ணுங்க கிட்ட தான்......! அதுனால தான் நம்ம ஏஎம் அம்மா அந்த வினோத்தோட நியாபகத்தையே புடிச்சுக்கிட்டு தொங்குறா!"
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...