🌻 அழகி 90

307 12 3
                                    

"முகில்ம்மா.... வேண்டாம் முகில்ம்மா; வாங்க நாம முதல்ல வீட்டுக்குப் போயிடலாம்! ஜெயன் சரியானதும் அவனா கெளம்பி நம்ம வீட்டுக்கு வரட்டும்!" என்று அத்தையிடம் சொல்லி சின்ன குழந்தை போல அடம் பிடித்து கையை உருவிக் கொண்டு ஓட நினைத்த மருமகளை தன்னுடைய குடங்கைக்குள் அவள் கைகளை விட்டு அழுத்திப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார் முகிலமுதம்.

"பழசயெல்லாம் மறக்கணும் வதனிக்கண்ணு! அம்மாவையும் வினோத்தையும் இழந்த வலி
ஒனக்கு காலம்பூரா இருக்கத்தா செய்யும்.... அதுக்காக இந்த ஆஸ்பத்திரிக்குள்ள காலயே எடுத்து வைக்க மாட்டேன்னு சொன்னா இதென்ன சின்னப்புள்ள தனமா இருக்குன்னு நான் ஒங்கிட்ட கேப்பேன்!"

"நாளப்பின்ன நீ புள்ள பெத்துக்கணும்... கரு தரிச்சதுல இருந்து புள்ள கையில கெடைக்குற வரையில ஆயிரத்தெட்டு தடவ நம்மள இங்கதா நடையா நடக்க உடுவாய்ங்க! அப்பல்லா இங்க வர மாட்டேன்னு சொல்லுவியா நீயி?" என்று கேட்ட மாமியாரிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றவள்,

"ஹலோ மிஸஸ் ஜெயன்!" என்ற ஒரு கட்டைக் குரலில் பயந்து பின்னால் திரும்பினாள்.

"ஐம் ஷ்யூர்! நா ஜெயனோட மொபைல் வால்பேப்பர்ல பாத்தது உங்கள தான்... நீங்க தான் மிஸஸ் ஜெயன் ரைட்?" என்று கேட்டவன் முதல் பார்வையிலேயே ஒரு காவல்துறை அதிகாரி என்பது அவனுடைய மிடுக்கான பார்வையிலும், அளவெடுத்து ஒட்டி வைத்தது போன்ற மீசையிலும், ட்ரிம்டு ஹேர்கட்டிலும் தெரிந்தது.

"யெஸ் ஸார்.... ஐ'ம் பர்வத வர்த்தினி ஜனமேஜயன்! என் ஹஸ்பெண்ட் மிஸ்டர் ஜெயனோட புல்நேம்!" என்று அவனிடம் சின்ன புன்னகையுடன் சொன்னவள் தன் அத்தையிடம் திரும்பி,

"முகில்ம்மா இந்த ஸார்தா ஜெயன் ஹெல்ப் பண்ண எஸ்ஐ ஆ இருப்பாருன்னு நெனைக்குறேன்!" என்று மெதுவான குரலில் சொன்னதும் அவனுக்கு கேட்டு விட்டது போலும்!

"ஸாரிம்மா.... ஸாரி சிஸ்டர்! உங்க ரெண்டு பேரையும் நேத்து நைட் பூரா டென்ஷன்ல வச்சிருந்தது என்னோட பேமிலி தான்! நான் லோகேஷ்..... சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்!" என்று சொல்லி இருவருக்கும் பொதுவான ஒரு வணக்கத்தை செலுத்தினான்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now