கண்ணுக்கு முன்னால் பெரிய அளவில் ஒரு காலி இடம் தெரிந்தது வதனிக்கு. அது உண்மையில் காலி இடம் அல்ல; லவ்டேலை சுற்றி அமைந்துள்ள லேக்வ்யூ பாயிண்ட்!
இந்த மாதிரியான பங்களாக்களின் முதலாளிகள் தங்களுடைய பங்களாவில் இருந்து ஏரிக்கு ப்ரத்யேகமாக ஒரு பாதை அமைத்துக் கொண்டு அதில் படகு விட்டுக் கொள்ளலாம்; தண்ணீர் இல்லாத ஏரிக்குள் இறங்கி கிரிக்கெட் விளையாடலாம்; சின்னதாக டென்ட் அமைத்து அதில் தங்கலாம்....... ஆனால்
ஏரியில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுடைய பாதுகாப்பை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்!அங்கு தான் இப்போது ஜெயனும், வதனியும் வந்து உட்கார்ந்திருந்தனர். அவனிடம் பேச நிறைய கதைகள் இருந்தது வதனிக்கு.
"ஜெயன்.... 80'ஸ் ப்ரீயட்லலாம் இந்த மாதிரி புல்வெளியில தான டூயட்ஸ்லாம் எடுப்பாங்க..... நாமளும் அவங்கள மாதிரியே இந்த எடத்துல உருண்டு வெளையாடலமா?" என்று குதூகலித்த படி கேட்டவளை
"யாரும்மா நீயி?" என்று கேட்பவன் போல முறைத்துப் பார்த்தான் அவன்.
பின்னே அலைபேசியில் பேசிய போது "இப்ப நீ என்ன சொல்ற? வினோத்தோட நெனப்பு இல்லாம இப்ப ஒம்மனசுல நாந்தான் இருக்குன்னே சொல்றியா?" என்று கேட்டவனிடம் ஆம் என்றோ இல்லை என்றோ ஒரு தெளிவான பதிலைத் தராமல் உன்னைப் பார்க்க நீ இருக்கும் இடத்திற்கு வருகிறேன் என்றாள்; சரி..... வந்ததும் வராததுமாக ஏதோ அவளுடைய மனதில் இருப்பதை தான் கொட்டப் போகிறாள் என்று அடித்துப் பிடித்து ஓடி வந்தால்,
"நானும் ஒங்கூட சேந்து வேல செய்யட்டுமா?" என்று கேட்டு சுத்தம் செய்யும் வேலையைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
அந்தக் கொடுமையெல்லாம் போதாதென்று இப்போது அவனிடம் இந்த இடத்தில் உருண்டு விளையாடாலாமா என்று வேறு கேட்கிறாள்!
"இவ என்னைப் பத்தி என்னத்த தான் நெனச்சுக்கிட்டு இருக்கா? ஒன்னப் பிடிச்சுருக்குடா ஜெயனு.... ஒன்னையவே நான் கல்யாணம் பண்ணிக்குறேன்னு ஒருவார்த்த சொன்னா கொறஞ்சா போயிடுவா?" என்று நினைத்தவன் அவளிடம் ஒரு மாதிரியான சலிப்புக்குரலில்,
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...