அவள் நினைத்த மாதிரியே அன்று நள்ளிரவில் தான் மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
"இனிமே இப்டி ஒருநா டூருன்னு எங்கள இழுத்தடிக்காதடா! எங்கள அங்க இங்கயின்னு அலைக்கழிச்சு கூட்டி சுத்திக்கிட்டு நீயி நல்லா கல்லுல செஞ்ச குந்தாணி மாதிரித்தா இருக்குற..... எங்க ரெண்டு பேராலயும் தான் சுத்தமா முடியல!" என்று பேசிய முகிலமுதத்திடம்,
"சேரி.... சேரி ரொம்ப சலிச்சுக்காத
அமுதாம்மா! ஏதோ குன்னூருல இருந்து கோவைக்குக்கு பாதயாத்திர போயிட்டு வந்த மாதிரியில்ல அம்மாடா, அப்பாடாங்குற.... இவளப் பாரு ஒத்த இழுப்பு இழுத்துட்டு வந்ததுக்கே பொதக்குன்னு போயி ஒக்காந்துட்டு இருக்கா.....!" என்று ஸோஃபாவில் ஜீவனே இல்லாமல் விழுந்திருந்த வதனியை கைகாட்டினான்."வதனிப்புள்ள.... நாளைக்கு முடிஞ்சா பேங்குக்கு போத்தா; இல்லையின்னா ஒருநா லீவு சொல்லிக்கலாமா? வேல நெறய இருக்குற நேரமுன்னு சொன்னியே தங்கம்? எல்லாம் இவனால.... ஒரேநாளுல சினிமாவுக்கு போவணும், அங்க போவணும், இங்க போவணும்னு எட்டு எடத்துக்கு இழுத்தடிக்காதன்னா எங்க நம்ம பேச்ச காதுல வாங்கித் தொலையுறான்? வீட்டுக்குள்ள வந்து ஒக்காந்ததுந்தே நமக்கு ஒடம்புல இருக்குற வலியெல்லாம் ஒண்ணொன்னா தெரியுது....!" என்று சொன்ன தாயிடம்,
"இவ்வளவு விடாம பொலம்புறதுக்கு எனக்கு வாய் வலிக்குதுன்னு என்னைக்காவது ஒருநா எங்கிட்ட சொல்லி இருக்குறியா நீயி? அவளுந்தான நம்ம கூட வந்தா? முடியலன்னதும் செவனேன்னு ஒரு ஸோஃபாவுல கட்டைய நீட்டிட்டு கெடக்குறாளே ஒழிய, ஒன்னைய மாதிரியா வியா வியான்னு கத்திக்கிட்டு கெடக்கா? நீ வா ரூமுக்குள்ள வந்து படு! கொஞ்ச நேரம் மருந்தத் தடவி ஒங்காலப் புடிச்சு உடுறேன்..... காலு ரொம்ப வலி எடுக்காம இருக்கும்!" என்று சொன்னவன் கண்களை மூடியிருந்தவளை பார்த்து விட்டு,
"இரு.... அமுதாமாவ்வ கவனிச்சுட்டு
அடுத்து உங்கிட்ட வாறேன்!" என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு தாயின் அறைக்குள் சென்றான்.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...