🌻 அழகி 52

401 16 4
                                    

வதனி இன்னும் குளிக்க வேண்டியிருந்தது; கீழே சென்று முகில்ம்மாவிற்கு கொஞ்சம் உதவிகளை செய்து கொடுக்க வேண்டியிருந்தது...... ஆனால் அவை எதையுமே சிந்திந்து கூடப் பார்க்காமல் கால் முட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

சுவர் கடிகாரத்தை நிமிர்ந்து மணியைப் பார்த்தாள். இன்னும் கால் மணி நேரத்திற்கு பிறகு போய் குளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அமர்ந்திருந்த நிலையே அப்படியே இருந்து விட்டாள்.

மேல் இதழ், கீழ் இதழ், தாடை, நாக்கு, பின்கழுத்து, மார்பு என அவளது எல்லா உடல் பாகங்களும் அவனுடன் இவ்வளவு நேரம் போராடியதால் வலியை சுமந்து கொண்டிருந்தன.

"என்னைய பாத்து பயப்படாதடீ!" என்று சொன்ன சொல்லில் கண்களில் அவ்வளவு வலியைக் காட்டினான். இப்போது இவளுக்கு வலிப்பதை விட நிச்சயமாக அவனுடைய அந்த வலி அதிகமாக தான் இருந்திருக்கும்!

"நீ என்ன இப்பயும் அவனுக்குத் தான் ஸப்போர்ட் பண்ற? அவன் செஞ்சதெல்லாம் சரியா?" என்று அவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தன்னுடைய மனதிடம்,

"அது வந்து..... ஜெயன் செஞ்சது எல்லாமே தப்புன்னு சொல்ல முடியாது!" என்று யாரிடமோ பேசுவது போல் சற்று சத்தமாகவே சொன்னாள் வதனி.

"அப்ப இப்டியே வாயத் தொறக்காம அழுவு!" என்று சொல்லி விட்டு போய்விட்டது அவளது மனது.

"வேற யார்ட்ட போயி இதெல்லாம் பேசச் சொல்ற? ப்ரெண்ட்ஸ், அம்மா அப்பா, பெஸ்ட்டீஸ் இந்த மாதிரி தான் யாருமே இல்லயே எனக்கு; முகில்ம்மாட்ட போய் பேசுனா, அவங்களுக்கு வர்ற கோபத்துல அவங்க ஜெயன ஏதாவது செஞ்சுடுவாங்க! அதுனால நான் இப்டியே இருந்துக்குறேன். போ!" என்றவள் ஜெயனுடைய உரிமை உணர்வையும், ஒரு ஆணாக அவன் தன் மீது கொண்டிருந்த ஆசையையும் புரிந்து கொள்ள முயற்சி செய்தாள்.

"கைய விடு..... நான் என்ன சின்னப்புள்ளயா? நானே நடந்து வருவேன்!" என்று சொன்னாலும் அவள் பேச்சைக் கேட்காமல் சாலைகளைக் கடக்கும் போது, கூட்ட நெரிசலின் போதெல்லாம் முகிலமுதத்தின் கையை ஒரு பக்கமும், வர்த்தினியின் கையை ஒருபக்கமும் பிடித்துக் கொண்டுதான் நடப்பான்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now