🌻 அழகி 68

291 14 2
                                    

அன்று காலை நீலகிரி மாவட்டத்தின் District Police Office சைனப் ட்ராவல்ஸின் உரிமையாளன் நஸாரையும், அவனுடைய பணியாளன் மாரிமுத்துவையும் அழைத்து வாழ்த்து தெரிவித்ததை குன்னூரின் உள்ளூர் டீவி சேனலில் செய்தியாக காண்பித்து இருந்தனர்.

"அமுதாம்மா.... இங்க ஓடியா.... இந்தா டீவியில நஸாருப்பயலையும்,  முத்துவையும் காட்றாய்ங்க பாரு!" என்று உணர்ச்சிப் பெருக்கில் கூவிய மகனிடம்,

"ஏன்டா ஒம்ப்ரெண்டு ஒன்னையவும் கூட கூட்டிட்டுப் போவல? ஒரு பேக்க திருப்பிக் குடுத்ததுக்கா டீவியிலலாம் காட்றானுவ? இந்நேரம் வதனிப்புள்ள இங்க இல்லாம போயிட்டாளே? " என்று ஒரு கேள்வி கேட்டு விட்டு மகனிடம் சொன்னார்.

"அதென்னம்மோய்.... ஒரு பேக்குன்னு சாதாரணமா சொல்ற? இந்த லக்கேஜ பத்திரம் பண்ணி குடுக்குற வேலைய ஆரம்பிச்சதுல இருந்து நாங்க இதுவரைக்கும் எத்தன பொருள ஒடமைப்பட்டவங்க கிட்ட பத்திரமா திருப்பிக் குடுத்துருக்கம் தெரியுமா? ஏதோ இந்த லூசுப்பய கஸ்டமரு பையில ஒரு தங்கச்சங்கிலியும் இருந்துச்சாம்; அதுனால தான் எங்களுக்கு அங்க போலீஸ்காரங்க தனியா பாராட்டு குடுத்தாங்க தெரியுமா?"

"அன்னைக்கு அந்த கஸ்டமரோட எங்கங்க போனோம்னு நியாபகம் வச்சு மேட்டுப்பாளையத்துல இருக்குற தீம்பார்க்ல மறந்து அவங்க விட்டுட்டு வந்த பைய எங்களோட ட்ராவல்ஸ் Tag அ காமிச்சு மாரிமுத்து தான் மெனக்கெட்டு தேடிக் கண்டுபிடிச்சு குடுத்துருக்கான்!"

"பேக்க கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சவனும், மொதலாளியுந்தா பாராட்ட வாங்கப் போவாங்க! நீ எதுக்கு
சம்பந்தமேயில்லாம என்னைய அங்க போவலையான்னு கேக்குற? நானும் ஏதாவது பைய கண்டுபிடிச்சு குடுத்தேன்னா வேணா அங்க போயி நிக்குறேன். அப்ப என்னிய நீ இந்த மாதிரி டீவியில பாரு என்ன?" என்று சொன்ன மகனிடம்,

"ஆமா....  டீவியில இவேன் என்னிக்கு வருவான்னு பாத்துக்கிட்டே நாங்க வாயப் பொளந்துக்கிட்டு ஒக்காந்து இருக்க வேண்டியதுதான்..... போடா அங்கிட்டு!" என்று அவனை திட்டி விட்டு சமையல் அறைக்குள் சென்றார் முகிலமுதம்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now