திங்கட்கிழமை மாலை ஆறே முக்கால் மணியளவில் வெள்ளையும் ஆரஞ்சுமாக பூக்களிட்ட ஒரு டாப்ஸூடன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்திருந்தாள் வதனி.
வாசலிலேயே அவளைப் பார்த்து விட்டவன் அவளது உடையைப் பார்த்து விட்டு எரிச்சலுடன் ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.
"பொடவ மாத்துறதற்கு சோம்பேறியா இருக்குமுன்னு சொல்லிட்டு இப்ப வீட்லயே ஒக்காரப் போறா இவ..... நீ கெளம்பாம இருக்குறதுக்கு எத்தாம்பெரிய ப்ளான போட்டுருந்தாலும் எங்கிட்ட அது ஒன்னும் வேலைக்காகாதுடீ செல்லம்!" என்று மனதிற்குள்ளாக அவளிடம் பேசியவன் அவளை கண்டும் காணாதது போல்
கட்டிலில் கிடந்தான்.வாசலில் செருப்பை கழற்றி விட்டு மேலே ஏறாமல் அப்படியே நேராக
முகிலிடம் வந்து அமர்ந்தவளிடம்,"வந்துட்டியா தங்கம்? ஒனக்காக தான் ஜெயனு இம்புட்டு நேரமா காத்துக்கிட்டு இருக்குறான்; இன்னிக்கு அவன் சேக்காளி பசங்களுக்கு பொறந்தநாளாம்ல? ஒங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூப்ட்டுருக்குறதா ஜெயனு சொன்னாப்ல! டீ எடுத்தாரவா கண்ணு? குடிச்சுட்டு அங்க கெளம்புறீங்களா?" என்று கேட்டார் முகிலமுதம்.
"இல்ல முகில்ம்மா; எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு; இன்னிக்கு பேங்க்ல நெறய வேலை; நஸார் ஸார் வீட்ல பர்த்டே பங்ஷனுக்கு ஜெயன மட்டும் போயிட்டு வரச் சொல்றீங்களா? இல்ல நீங்களும் அவனுமா போயிட்டு வாங்களேன்; நைட்டுக்கு நான் வீட்ல சிம்பிளா ஏதாவது வச்சுக்குறேன்.....!" என்று வதனி முகிலிடம் கேட்க அவளது பேச்சை காதிலேயே வாங்காதவன் போல ஜெயன் கட்டிலில் படுத்துக் கொண்டு தன்னுடைய மொபைலில் யூடியூப்பில் ஏதோ ஒரு ட்ராவல்ஸ் vlog ஐ பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஜெயனு.... வதனிப்புள்ளைக்கு அலுப்பா இருக்குதாம். நஸாரு வீட்டுக்கு நீ மட்டும் போயிட்டு வர்றியாய்யா?" என்று வதனியை ஒரு பார்வை பார்த்த படி தன் மகனிடம் கேட்டார் முகிலமுதம்.
"நான் மட்டுமா போறதுக்கு எதுக்கு அங்க போயிக்கிட்டு? நானும் அங்க போகல அமுதாம்மா!" என்று சொன்னவன் கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டான்.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...