"நீ எங்கிட்ட கேட்டதயாவது முழுசா வாங்கிட்டுப் போயிருக்கலாம்ல? என்னைய இப்டி தனியா விட்டுட்டுப் போயிட்டியே? இப்ப நான் என்ன செய்றதுன்னு கேட்டியே? ஏன் அப்டி பேசுன?" என்று கேட்டவனுடைய கேள்வியில் அவன் தலையை துடைப்பதை நிறுத்தி விட்டு வதனி ஜெயனுடைய கண்களைப் பார்த்தாள்.
"என்னை இப்டி பாக்காத ஹெட்லைட்டு! நாம ரெண்டு பேரும்
இப்ப வேற ஒருத்தரோட வீட்ல இருக்கோம்...... நம்ம வீட்ல இருக்குற மாதிரியெல்லாம் இங்க நாம இருக்கக்கூடாது.....
என்னைய தேடி ஒரு பொண்ணு வருவாய்யான்னு நான் நிக்கலசு கிட்ட சொன்னா, ஓ ஒன்னையும் தேடி ஒரு பொண்ணு வரப் போவுதா அப்டின்னு நக்கலா கேக்குறான் அவன்....!""அவனோட நெனப்பு எதையும் நாம உண்மையாக்கிட கூடாது வர்த்தினி; ஒன்னைய அவேன் அப்டி பேசுனதுல எனக்கு செம கடுப்பு; அதுனால தான் அவனுக்கு சாப்பாடு கெடையாதுன்னு சொல்லிட்டு கூடைய அவங்கிட்ட இருந்து புடுங்கிட்டு வந்துட்டேன்!" என்றான் உறுதியான குரலில்.
"ஒழுக்கம்ங்குறது நம்ம வாய்ப்பேச்சுல இருக்கக்கூடாது; நம்மளோட செயல்கள் மூலமா வெளிப்படணும்னு எவ்ளோ நாசூக்கா சொல்ற ஜெயன்.....? ஆக்சுவலி இந்த மாதிரியெல்லாம் நீ பேசும் போது தான் ஜெயன் எனக்கு ஒம்மேல நெறய மரியாத வருது. தேங்க்யூ!"
"நம்மளோட நைட் டைம் ரெகுலர எப்பவும் போல நம்ம வீட்லயே போய் பாத்துக்கலாம். தலைல ஈரம் நல்லா போயிடுச்சா பாரு?" என்று கேட்டவளிடம் புன்னகைத்து தலையை ஆட்டியவன் அவளுடன் எழுந்து சென்று தரையில் அமர்ந்து கொண்டு காலை உணவை சாப்பிட ஆரம்பித்தான்.
"இவ்ளோ பெரிய வீட்டையும், வெளிய இருக்குற அவ்ளோ பெரிய ஏரியாவையும் தனியாளா எப்டி ஜெயன் க்ளீன் பண்ணி முடிக்கிற? அது ரொம்ப கஷ்டமான வேலை இல்ல.....?" என்று தன் முகத்தில் ஆச்சரியத்தையும், மலைப்பையும் காட்டி அவனிடம் கேட்டாள் வதனி.
"ஏன்.... உன்னோட வேல கஷ்டமான வேல இல்லையா ஏஎம் அம்மா? வர்த்தினியா நீ என்ன செய்வ, ஏது செய்வன்னு எனக்கு கொஞ்சம் தெரியும்..... ஆனா ஒரு பேங்க் ஆபிசரம்மாவா என்ன செய்வ, உன் வேல எப்டிப்பட்டதுன்னு எனக்குத் தெரியாதுல்ல?"
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...