🌻 அழகி 87

340 11 2
                                    

"நிக்கலஸ் ஸார்.... நல்லா இருக்கீங்களா? வீட்ல ஒங்க வொய்ஃப், பசங்க அவங்களோட கொழந்தைங்க எல்லாரும் நல்லாயிருக்காங்களா? நேத்து தான் எனக்கும் மிஸ்டர் ஜெயனுக்கும் கல்யாணம் ஆச்சு! நீங்க என் ஹஸ்பெண்டோட ஸ்பெஷல் ப்ரெண்டாம்; அதுனால அவர் உங்களப் பார்த்து உங்களுக்கும் உங்களோட வொய்ஃப்க்கும் புது ட்ரெஸ் எடுத்துக் குடுக்கணும்னு ஆசப்பட்டாரு!" 

"இந்தாங்க..... இதுல உங்களோட ட்ரெஸ் மெட்டிரியலும், ஒரு புடவையும் இருக்கு! கூடவே ஸ்வீட்ஸ் கொஞ்சம் பழம்... அதெல்லாம் ஒங்க வீட்ல இருக்குற குழந்தைங்களுக்கு! வாங்கிக்கோங்க ஸார்!" என்று புன்னகைத்த முகத்துடன் ஒரு பெரிய பார்சலை அவரிடம் நீட்டியவளை வைத்த கண் வாங்காமல் கையைக் கட்டிக் கொண்டு அவள் பக்கத்தில் நின்று பார்த்திருந்தான் ஜெயன்.

"நா நல்லாயிருக்கேனுங்க ஆபிசரம்மா.... எங்க ஜெயனவே நீங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டதுல ரொம்ப சந்தோஷமுங்க!" என்று வதனியிடம் கும்பிட்ட படி சொல்லிக் கொண்டிருந்தார் நிக்கலெஸ்.

"ரொம்ப வெள்ளையின்னுலா சொல்ல முடியாம இவளும் தேன் கலர்லதா இருக்கா ஆனா இவ மொகத்துல போட்டுக்குற பவுண்டேஷன் மட்டும் துண்டா தெரிஞ்சு ஜொலிக்குது..... அதயேத்தா நானும் எடுத்து அப்பிக்குறேன்...... எம்மூஞ்சியில மட்டும் ஒரு சேன்ஜும் தெரியலயே? அது சரி... நம்மளுக்குலா வெள்ளையாக நாலு லாரி பவுண்டேஷன் வேணும் போலிருக்கு!" என்று நினைத்துக் கொண்டவன்,

"யோவ் நிக்கலசு! என்ன நீ அவ கிட்ட மட்டும் பேசிக்கிட்டே இருக்க! எங்கிட்ட பேச மாட்டேங்குற?" என்று அவரிடம் சண்டைக்குப் போனான்.

"யய்யா.... என்னியலா ஒரு ஆளுன்னு மதிச்சு கல்யாணம் ஆனவொடனே ஒவூட்டுக்கார ஆபிசர் அம்மாவ இங்க கூட்டியாந்துருக்கியேய்யா.... அதுவும் இத்தன பொருள வேற வாங்கியாந்துருக்கீக! கொஞ்சம் பொறு. எவூட்டுக்காரிய நா கறிக்கொழம்பு சமைச்சு இங்க எடுத்தார சொல்லுறேன். அவளுக்கு நீங்க வாங்குன சீலய ஒங்க கையாலயே அவகிட்ட குடுங்க. சந்தோஷப்படுவா!"

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin