"ச்சே.... ச்சே! உன்னைய எதுக்குடீ தங்கம் நா இங்கணக்குள்ள உட்டுட்டுப் போறேன்? வரலையின்னு சொன்னீன்னா ஒன்னைய இடுப்புல தூக்கி வச்சுட்டு நீ நடக்க வேண்டிய எடத்தையும் சேத்து நானே நடப்பேன். ஏதோ சும்மானாச்சுக்கு சொல்றேன்னு நெனைக்காத வர்த்தினி; நிச்சயமா இந்த கேம விளையாடி முடிச்சுட்டு தான் இந்த ரிஸார்ட்ட விட்டு கெளம்புவேன்!" என்று சொன்னான் ஜெயன்.
"ஏன்டா இப்டி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அடம்பிடிச்சு என் உயிர வாங்குற?" என்று கேட்டவளிடம்,
"எது சின்ன விஷயம்? ஒங்கூட சேந்து வெளாண்டு ஒரு போட்டியில ஜெயிச்சா அது எனக்கு எவ்ள பெரிய விஷயம் தெரியுமா? கூமுட்ட..... ஒனக்குத்தான்டீ இதோட சீரியஸ்னெஸ் புரிய மாட்டேங்குது!" என்று அவளை கோபமாக திட்டினான்.
"டீம் நம்பர் எய்ட்! இப்போ உங்களோட டர்ன்! ரொம்ப நேரமா டிஸ்கஷன்லயே இருக்கீங்க? கேம்ல நீங்க இருக்கீங்களா இல்லையா?" என்று அவர்களிடம் கேட்டு அவர்களுடைய வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களா இல்லை விளையாட்டை விளையாடாமல் மற்ற இரண்டு அணியினருக்கு ஜெயிக்கும் வாய்ப்பை வழங்கப் போகிறார்களா என்று நினைத்து அவர்களிடம் பேசினாள்
அச்சுதனின் தங்கை."வீ ஆர் இன்! இதோ வந்துட்டோம் அனுபமா!" என்று சொன்ன வதனி ஜெயனை தன்னுடைய பக்கமாக இழுத்து,
"கால தரையில தேய்ச்சுட்டே நட! ஏதாவது தட்டுப்பட்டா மெதுவா கால தூக்கி வச்சு நட..... இது தான் ப்ளான்; புரியுதா?" என்று சொன்னவளிடம் தன்னுடைய பற்கள் அனைத்தையும் காட்டியவன்,
"அப்ப கப்பு நமக்குத்தான ஏஎம் அம்மா?" என்று கேட்க அவள் எதுவும் சொல்லாமல் அவனிடம் விளையாட்டை கைகாட்டி விட்டு சென்றாள்.
ஒரு நிமிடம் நாற்பத்தைந்து நொடிகளில், ஒரு நிமிடம் பத்து நொடிகளில் விளையாடியிருந்த மற்ற இரண்டு அணியினரை விட குறைந்த நேரத்தில் 58 வினாடிகளில் ஜெயனும் வதனியும் தங்களுடைய இலக்கை துல்லியமாக கடந்து இந்த விளையாட்டில் முதல் இடத்தில் வந்திருந்தனர்.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...