🌻 அழகி 75

273 9 0
                                    

கரும்பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட அந்த சமுதாய நலக்கூடத்தில் சுவரில் டெகரேஷனுக்காக மாட்டப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் பூக்களும், மணமேடையில் சுவர்களை மறைக்க போடப்பட்டிருந்த ஸாட்டின் திரைச்சீலைகளும் இன்னும் இரண்டு முறை கழுவி, துவைத்து எடுத்தால் தான் பளிச்சென்று இருக்கும் என்று நினைத்தபடியே அங்கு போடப்பட்டிருந்த ஒரு சேரில் அமர்ந்திருந்தான் ஜெயன்.

ஜனமேஜயன் வெட்ஸ் பர்வதவர்த்தினி என்ற
ஒவ்வொரு தெர்மாகோல்
ஆங்கில எழுத்துக்களும்
குண்டூசி போட்டு ஸாட்டின் திரைச்சீலையில் நிற்க வைக்கப்பட்டிருந்த மணமக்களின் பெயரைப் பார்த்து விட்டு ஒருமுறை திருப்தியாக சிரித்துக் கொண்டான்.

இவ்வளவு நேரம் வேலை பார்த்த உடம்பு எனக்குப் பசிக்கிறது என்று கேட்டு வயிற்றைப் பிசைய ஆரம்பித்திருக்க வாசல் புறமாக நின்று கொண்டிருந்தவரிடம்,

"யோவ் பெர்சு..... இன்னும் அங்க நின்னுக்கிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?  எனக்கு வயிறு பசிக்குது! சாப்பாடு ரெடியா? இன்னும் ரெடி ஆகலையின்னா இப்ப வாசல்ல கட்டுனியே வாழமரம்.... அதுல இருந்து ரெண்டு வாழைப்பழத்த பிய்ச்சுக் குடுயா!" என்று கால் மேல் கால் போட்டுக் கேட்க அவனைப் பார்வையால் எரித்தார் திண்ணன்.

"எதுக்கு இந்த மொறப்பு? ஓ.... வாழமரத்துல வாழக்கா தான் இருக்கும்.... வாழப்பழம் இருக்காதோ? ஆறு மணிக்கு இங்கணக்குள்ள வந்து ஒன்றமன்னேரமா அம்புட்டு வேல பாத்துருக்கேன் நானு.... வயிறு பசிக்குது.... ஏதாவது சாப்புட குடுன்னு கேக்குறது தப்பா?" என்று கேட்டவனிடம்,

"நாந்தாமுடா ஒங்கல்யாணத்துக்கு விருந்தாடியா வந்துருக்கேன். காய் வந்து எறங்குனது, பால வாங்கிட்டு வந்தது, சமையக்காரங்களுக்கு ஒத்தாச செஞ்சது, சேர அடுக்கிப் போட்டது, வாழமரத்த எறக்குனது,  கட்டுனது, சந்தனம் கரைச்சதுன்னு வந்ததுல இருந்து ரெண்டு பேருமா நின்னு எம்புட்டு வேல செஞ்சுருக்கம்? அப்ப ஒனக்குப் பசிக்குறத மாதிரி எனக்கும் பசிக்காதா?" என்று கேட்டார் திண்ணன்.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now