"டேய்.... என்ன நீ? என்னமோ நான் தப்பு செஞ்ச மாதிரி இப்ப
எம்மேல கோபப்படுற? அருண் எங்கிட்ட பேசுனது மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு தான்; அத சரி பண்றேன்னு சொல்லி நீ எங்கிட்ட பேசுனது, செஞ்சதெல்லாம் ரொம்ப ஓவர் இல்லையா? இந்த மாதிரி என்னை தொடுறதெல்லாம் வேணாம், வேணாம்னு தான் நான் உங்கிட்ட சொல்றேன்; நீ தான் எம்பேச்ச கேக்கவே மாட்டேங்குற! அப்புறம் நான் உங்கிட்ட இருந்து ஓடாம என்ன செய்வேன்? நீயே சொல்லு!" என்று கேட்டவளை சேரின் கைப்பிடியில் கைவைத்து, அதைக் கன்னத்தில் முட்டுக்கொடுத்து ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயன்."ம்ப்ச்! என்ன பாத்துட்டே இருக்க? ஏதாவது சொல்லு!" என்று அவனை அதட்டியவளிடம் புன்னகைத்தவன்,
"இன்னிக்கு நீ ரொம்ப அழகாயிருக்க வர்த்தினி!" என்றான் மென்குரலில்.
"அடே.......ய்! நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்? நீ என்னடா சொல்ற? ரோட்ல போற வர்ற எவனாவது எங்கிட்ட இப்டி பேசி டீஸ் பண்ணுனா அவன பாத்து மொறைக்கலாம்; நீயே இப்டி பேசுனா ஒன்னைய என்ன தான்டா செய்றது?" என்று கேட்டவளின் குரலில் மிகுந்த அலுப்பும், சலிப்பும் தென்பட்டது.
"ம்ம்ம்.... என்ன பண்ணலாம்? தெளிவா ஒரு முடிவெடுக்கலாம்! இங்க பாரு வர்த்தினி..... நான் ஒன்னைய மாதிரி கொழப்ப கேஸூ கெடையாது! எனக்கு நீ வேணும்; ஒன்னைய நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒன்னைய சந்தோஷமா வச்சுக்கிட்டு, நானும் சந்தோஷமா வாழணும்! அது ஒண்ணு தான் ஒங்கிட்ட இருந்து எனக்கு தேவையான விஷயம்..... ஒன்னைய மாதிரி கிட்ட வந்தா திட்டுறதும், எட்டப்போனா தேடுறதும், நீ என் பக்கத்துலயே வேணும் ஆனா நீ என் ப்ரெண்டுன்னு சொல்ற கதையெல்லாம் எங்கிட்ட வேலைக்காகாது......!"
"ஒன்னைய உட்டுட்டு தனியா இருக்குறப்ப எனக்கு மனசெல்லாம் அப்டி அலுத்துப் போவுது தெரியுமா? ஒழுங்கா வேலைய கவனிக்க முடியல; எவனப் பாத்தாலும் கோவம் கோவமா வருது; விறுவிறுன்னு வேலைய பாக்க முடியாம ஒருமாதிரி மந்தமா அசையுறேன்!"
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...