மகள்
பூனையுடன்
விளையாடிக்
கொண்டிருக்கிறாள்..தலை தடவுதலும்
வாலாட்டுதலுமாய்....கொஞ்சுதல்களும்
மியாவ்களுமாய்....கழுத்து மணியோசைகளும்
கொலுசு பரலோசைகளுமாய்....விளையாட்டின்
தீவிரத்திலிருந்த
மகளை
பேர் சொல்லி
அழைக்கமெல்ல திரும்பியவள்
"மியாவ்" என்றாள்.
YOU ARE READING
கோட்டோவியங்கள்
Poetry~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்