நீதானே எந்தன் பொன் வசந்தம்

25 3 1
                                    

வர்ணங்களற்று வறண்டுகிடந்த
மனதிற்குள் மாறுதல் தந்தது
மழையாய் நுழைந்த உன் வரவு.

நீர்த்துளி புகுந்து மீண்ட ஒளியாய்
நிறப்பிரிகை காட்டுகிறாய்
வெளிறிக்கிடந்த மனத்திரையில்.

வசந்தத்தில் பூக்கும் மலர்களனைத்தையும்
உன் ஒற்றைப் புன்னகையில் பூக்கவைக்கிறாய்.

மனதுக்குள் மட்டும் பெய்யும்
மாமழையாய் நீ.
அந்த அடைமழையில் கொளுந்து விட்டெரிகிறது என் காதல் தீ.

கோட்டோவியங்கள்Onde histórias criam vida. Descubra agora