அணிந்திருக்கும் அலங்காரத்திற்கும்
உடைகளுக்கும் கொஞ்சமும் பொருந்தாத அழகுடன்
மங்கலாய் விளக்கெரியும்
பேருந்து நிறுத்தத்தில்
கடைக்கோடியில் நின்றாலும்
எல்லாருடைய கவனத்தையும்
ஈர்த்துவிட பெரும் பிரயத்தனத்துடன் நிற்கிறாளவள்.இளமையை விற்பதற்கான
அறைகூவல்களை
மௌனங்களிலாலேயே
காற்றிலேற்றுகிறாள்
சிறு சிறு சிங்கார புன்னகைகளில்.அவள் இரவில் அரங்கேற்றும் வியாபாரங்களின்
லாபங்களினாலேயே
அவளின் பகல் நேர நட்டங்கள் சமனாகின்றன.இன்றைய இரவின்
அத்தனை மணிநேரங்களையும்
காசாக்க வேண்டிய அவசரத்தில்
அவளை நிறுத்தியிருக்கிறது
நாளையிலிருந்து தொடங்குவதற்கான முகாந்திரத்தில் இருக்கும் மாதாந்திர மூன்று நாட்களுக்கான
கட்டாய விடுப்பு.
STAI LEGGENDO
கோட்டோவியங்கள்
Poesia~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்