நீங்கள் அவனை புறந்தள்ளுகிறீர்கள்
உங்களைப் போல
சாதாரணனாக இல்லாததால்.நீங்கள் மறதியெனும்
வியாதிக்கார்களாய்
இருக்கிறீர்கள்.
அவன் ஞாபகங்களைச்
சங்கிலித் தொடராய்த்
தேக்கிக்கொண்டவனாய் இருக்கிறான்.நீங்கள் உபயோகமான
உறவுகளுடன் பேசிச்
சிரிப்பவர்களாய் இருக்கிறீர்கள்.
அவன் உங்களின்
உபயோகமற்ற நிகழ்வுகளைப்
பார்த்து தனக்குத்தானே
சிரித்துக் கொள்பவனாய்
இருக்கிறான்.நீங்கள் உங்கள் பொய்களை
ஆடையிட்டு மறைக்கத் துடிக்கிறீர்கள்.
அவன் கந்தலாடையில்
உங்கள் உண்மைகளை
உரக்கச் சொல்லிக்கொண்டு
இருக்கிறான்.நீங்கள் துவைத்த ஆடைகளில்
உங்கள் அழுக்குகளை
மறைக்க முயல்கிறீர்கள்.
அவனோ உங்கள்
அழுக்குகளைத்தான்
ஆடையாய் அணிந்திருக்கிறான்.நீங்கள் முரண்களின்
தொகுப்பாய் இருக்கிறீர்கள்.
அவனோ உங்கள்
முரண்களிலிருந்து
வேறுபட்டவனாய் இருக்கிறான்.அதனாலயே அவனை நீங்கள்
புறந்தள்ளுகிறீர்கள்.மேலும் அவனை
பைத்தியக்காரனென்றும்
விளிக்கிறீர்கள்.அப்போதும் அவன்
சிரித்துக் கொண்டுதான்
இருக்கிறான்.
VOCÊ ESTÁ LENDO
கோட்டோவியங்கள்
Poesia~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்