இல்லாத சாவியொன்றைத் திருகியதில்
அவன் வாய்வழிச் சத்தத்தில்
ட்ரூம் ட்ரூமென
இயங்கத் துவங்கியது
பேருந்தின் இஞ்ஜினொன்று.
அந்தப் பேருந்தில்
அவன் சட்டை நுனியைப்
பிடித்தேறிய
சட்டையணியாத முதல் பயணியின்
கால்சட்டை பட்டியைப் பிடித்து
இரண்டாம் பயணியும் ஏறியவுடன்
அவனே நடத்துனருமாகவும் மாறி
டிக்கெட்டுகளையும் வினியோகித்தான்.
"டவுணுடவுணேய்" என்று கத்தி
கிளம்பத் தயாராய் நின்ற பேருந்தில்
மூன்றாவதாய் நிற்கும்
சிறுமியின் தோளைப் பற்றி
நானும் ஏறிக்கொண்டு
எல்லாரும் ஓட ஆரம்பித்ததில்
டவுணை நோக்கி
வேகமாய் விரைந்தது பேருந்து.
நாளைக்கு இந்தப் பேருந்து
ஒரு குச்சுகுச்சு ரயிலாகவும்
தடதடக்கக் கூடும்.
DU LIEST GERADE
கோட்டோவியங்கள்
Poesie~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்