மகளதிகாரம்.

86 3 0
                                    

#மகளதிகாரம்

புத்தகங்களும் பொம்மைகளும்
கொண்ட உன் அலமாரிக்கருகில்
நீ நெருங்கும் ஒவ்வொருமுறையும்
எதையெடுப்பாயென
நகங்கடிக்கத் துவங்குகின்றன
பொம்மைகளும் புத்தகங்களும்.

வளர்ந்துவிட்டாயென
எண்ணும்போது
குதூகலிக்கிறதுன் குறும்புகள்.
குழந்தையென கொண்டபோது
தகர்க்கிறதுன் தர்க்கங்கள்.

பிறந்தநாள் பரிசாய்
நம்தெருவோரம் நடுவற்கு மரக்கன்றொன்றை
வாங்கித்தரக் கேட்போது
தெரிகிறது நீ எவ்வளவு
வளர்ந்து விட்டாயென.

எங்கள் மகளென்பது போய்
உந்தன் தாய்தந்தையென்பதை
எங்களடையாளமாய் மாற்றிவிட்டாய்
நீ  உன் ஒவ்வொரு செயலிலும்.

சுரேஷ் பரதன்.

#பரிசுப்போட்டி_1_கவிதை

கோட்டோவியங்கள்Tempat cerita menjadi hidup. Temukan sekarang