பார்ட் ஆஃப் லைஃப்

23 5 2
                                    

அறைவீட்டிற்குள்ளிருக்கும்
மளிகைகளுக்கு மத்தியிலோ
சேலை அலமாரியின்
பேப்பர் விரிப்பினிற்கடியிலோ
அல்லது
பழைய பெட்டியிலிருக்கும்
சுடிதார்களுக்கு ஊடிலோ
நீ ஒளித்து வைத்திருக்கக் கூடும்

லாஃப்டில் நான்
அட்டைப்பெட்டியில்
போட்டு வைத்திருக்கும்
புத்தகங்களுக்கு நடுவிலிருக்கும்
கையொப்பமிடாமல்
வித் லவ் என்றெழுதி
நீயெனக்குத் தந்த
க்ரீட்டிங்க் கார்டை போல

நான்  உனக்களித்தனவற்றில்
ஏதேனுமொன்றை.

கோட்டோவியங்கள்Tempat cerita menjadi hidup. Temukan sekarang