பிரதிபிம்பங்கள்

18 5 0
                                    

நிலைக்கண்ணாடியோ
தெளிந்த நீர்பரப்போ
பிதிபலிப்பது
உங்களின் முகம்தானென
நிச்சயமாய் தெரியுமா

இந்த முகம்
இருப்பது உங்களின்
முன்பக்கமா
அல்லது மறுபக்கமா 

தேவை...கொடு.....
திருப்பித்தருகிறேனென
வாங்கும் போது
கொண்ட முகத்தை
திருப்பித்தரும்போது கொண்டிருந்தீர்களா..

காதலிக்கும்போது
கொண்ட முகத்தைத்தான்
காமுறும்போதும்
கொண்டிருந்தீர்களா

உண்மைகளை
உறக்கச்சொன்ன
முகத்தோடுதான்
உங்கள் பொய்களையும்
சொன்னீர்களா

உலகவெளிச்சங்களில்
தெரிந்ததே ஒருமுகம்
அதேதான்
உங்கள் உள்மன இருட்டிலும்
தெரியுமா

பிரதிபிம்பங்களை விட்டுவிட்டு இருளில் நீங்கள் கொண்ட
முகத்தோடு வாருங்கள்
அந்தகார இருட்டின்
ஏகாந்தத்தில்
நாம் உண்மையின்
பக்கத்தில் நின்றபடி
உரையாடிக் களிப்போம்.

கோட்டோவியங்கள்Where stories live. Discover now