நகர்புறத்து புறாக்கள்

24 2 0
                                    

வெகுதூரம் பயணித்து
வந்த அயர்ச்சியோ அல்லது
மீண்டுமொரு நீண்ட
பறத்தலுக்கான ஆயத்தமோ
எதிர்வீட்டு ஜன்னல் கம்பியில்
அமர்ந்து தன் சிறகுகளை
அலகால் கோதிக் கொண்டிருக்கும்
சாம்பல் நிற புறாவொன்றுக்கு
தேவையென்ன இருக்கக்கூடும்
வயல்வெளிகளோ நீர்நிலைகளோ ஏதுமற்ற
பொருளீட்ட நான்
புலம்பெயர்ந்து வந்த
இந்த பெரு நகரத்தில்
நானோ நீங்களோ வீசியெறியும்
ஒரு கைக்குத்தளவு சிறு தானியங்களை
கொத்தித் தின்னுவதைத் தவிர.

கோட்டோவியங்கள்Donde viven las historias. Descúbrelo ahora