கனவுகளைத் தொலைத்தவள்

13 3 0
                                    

உனைத்தவிர வேறு
நினைவுகளேயின்றி
தலையணைகளை நனைத்தவாறு
கழிகின்றன
என்னுடைய இரவுகள்.

பின்னந்திப் பொழுதுகளில்
நிகழும் சண்டை
சச்சரவுகளுக்காக
சமாதானக் கொடிபிடிக்கிறது
கணவனின்
அதிகாலைக் கூடல்.

மூர்க்கத்தனமான முயங்கலில்
மடித்தொழிக்கின்றான்
அவன் அன்றாடம் கொண்ட
பணி அழுத்தங்களை.

கடமைக்காக வாழ்ந்தே
கரைந்தழிகின்றன
உனக்காக நான் சேமித்த
என் பொக்கிஷங்களெல்லாம்.

ஜெயங்கொண்டிருக்கலாம்
நீ கொண்ட
இலட்சிய கனவுகளைப் போல
அந்நாளில் நாம் கொண்ட
நம் காதலும்.

கோட்டோவியங்கள்Tempat cerita menjadi hidup. Temukan sekarang