காலையில் எழு.
பல் துலக்காது
காபி குடி.
சிற்றுண்டி மறுதலி.
தேய்த்த உடை பூண்.
டியோவில் குளி.
துவைக்காத காலுறை
மறைத்து பளபளக்கும்
காலணி அணி.
பள்ளிக்கு அனுப்ப
மகளை
ஆட்டோவில் திணி.
மனைவிக்கு
சிறுமுத்தம் அளித்து
இருசக்கர வாகனமேறி
அலுவலகம் பற.
ஐரிஸ் ஸகேனரில்
அட்டெண்டண்ஸ் வை.
ரோமிங் ப்ரோஃபைலில்
அமெரிக்க டொமைனில்
கடவுச்சொல் உள்ளிடு.
மின்னஞ்சல் மேய்.
பதிலளிக்க நேரங்குறி.
டேட்டாபேஸ் திற.
ஆரக்கள் கொயரி
ட்யூனிங் செய்.
கூடவே கவிதை நெய்.
ஜாவாவில் கோடெழுது.
ஒபன்ஆபஸில்
நெய்த கவிதை
தட்டச்சிடு.
உயரதிகாரியிடம்
வாய்ஸோவர்ஐப்பியில்
திட்டு வாங்கு.
அதை
மேலும் பெருக்கி
கீழிருப்பவனிடம்
செலவழி.
ஒப்புக்கொண்ட
மீட்டிங் நிராகரி.
அதற்கென மெமோ பெறு.
மாலையில்
மதியவுணவாய்
பீஸா பர்கர் உண்.
பருத்த தொந்தி
பார்த்து
பேலியோ டயட்
பற்றி யோசி.
மீல்ஸ் கூப்பன் சேமி.
மொபைல் நெட்வொர்க்கில்
முகநூல் நுழை.
கண்டதையும் பார்.
நெய்த கவிதை பதிவிடு.
சமூக அநீதி கண்டு
ஆத்திரங்கொள்.
நீதி வேண்டி
ஸ்டேட்டஸ் அப்டேட்டிடு.
வாடஸ்ஸப்பில்
சுவாதிகளுக்காய்
வீரங்கொள்.
பின் எல்லாம்
மறந்து போ.
இரவில்
அமெரிக்க க்ளையன்டுடனான
உரையாடலுக்கு
தயாராகு.
மகள் உறங்கியபின்னே
வீடு வந்தடை.
ருசி நோக்காமல்
உணவு உண்.
வீப்பியென் வழியே
மீண்டும் அலுவலகம் நுழை.
கண் விழித்து
கார்ப்பரேட்டுகளுக்கு
காசு சேர்.
உறங்கிப் போன
மனைவியை எழுப்பி
முயங்கக் கெஞ்சு.
மறுப்பாளாயின்
வன்மையாய் புணர்.
பாதியிலேயே உறங்கிப் போ.
![](https://img.wattpad.com/cover/78651543-288-k745593.jpg)
YOU ARE READING
கோட்டோவியங்கள்
Poetry~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்