அம்மாவின் காதல்.

23 4 0
                                    

சொத்துக்களுக்காக
முட்டிக்கொண்டிருந்த
மாமன்களிடம்
வலுவாய்ச் சண்டையிட்டு
அவள் பங்கிற்காய்
அம்மாச்சியை மட்டும்
கேட்டுப் பெற்று
வீட்டிற்கு அழைத்துவந்த
அப்பாவிற்கு
தினந்தோறும் ஆக்கிப்போடும்
வெஞ்சனங்களில்
நிறைந்திருக்கிறது
அம்மாவின் காதல் ருசி!.

கோட்டோவியங்கள்Donde viven las historias. Descúbrelo ahora