மகளதிகாரம் 2

22 3 0
                                    

#மகளதிகாரம்
============

ஆணுக்கு ஆசைப்பட்ட
அதிகார அப்பன் நான்

பெண்ணால் பிரயோசனமில்லை
என்ற சமூகப் பிரதிநிதி நான்.

பிறந்ததென்னவோ நீதான்.

அடுத்து பிறந்திட்ட
அவனுக்குத்தான் அன்பெல்லாம்,
சலுகையெல்லாம். உனக்கில்லை.

அவன் உயரப்பறந்தாக வேண்டும்
நீ தாழ நடந்தாக வேண்டும்
இதுவே என் அந்நாளைய சிந்தனை.

அப்போது தெரியவில்லை
அவன் அப்படியே போய்விடுவான்
மகள்தான் சோறிடுவாளென

நீயிடும் ஒவ்வொரு கவளத்திலும்
தொண்டைக்குள் இடறுகிறது
அன்றைக்கு உனக்கு
நான் கொடுக்க நினைத்த
கள்ளிப்பால்.

சுரேஷ் பரதன்.

#பரிசுப்போட்டி_1_கவிதை

கோட்டோவியங்கள்Dove le storie prendono vita. Scoprilo ora