வீட்டில் இருக்கும்
பசுவோடு கூடவே வளர்ந்த
மேலத்தெரு கோதையக்கா
வெளிநாட்டில் வேலைசெய்யும்
கீழத்தெரு மணியழகனை
மணமுடித்து அவன் வாழும்
வெளிநாட்டில் குடித்தனம்
பண்ணப் போனவள்
பூ மாதிரி அவளை தாங்கும்
அவனிடம் அடம்பிடித்து
ஊருக்கே மொத்தமாய்த்
திரும்பி வந்தாள்
அவளின்றி மெலிந்துகிடக்கும்
பசுவைப் பேண
அதுவின்றி தான் மெலிந்த
சோகம் புரிந்து!
KAMU SEDANG MEMBACA
கோட்டோவியங்கள்
Puisi~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்