அதுவொன்றும் வெகுஜன
திருமணமில்லை.
ஆனாலும் அது
சொர்க்கத்திலேயே தான்
நிச்சயிக்கப்பட்டிருந்தது.எல்லாத் திருமணங்களிலும்
இருக்கின்ற எல்லாமும்
இந்தத் திருமணத்தில்
இல்லாமலிருந்தது.கூடப்போகும் பொறுப்புணர்ந்தவனாக
மணமகனும்
சூழலின் வெப்பமுணர்ந்தவளாக
மணப்பெண்ணும்.
சிரிப்பிழந்த செவ்விய
முகங்களோடு.கூடிவாழ்த்த உற்றாரும் இல்லை.
பகடி பேச ஊராருமில்லை.
சாட்சியமிட்ட பக்கத்துக்கிரு
நண்பர்களிருந்தனர்.குறுகுறுப் பார்வை
பார்த்தவாறு இருந்த
பதிவக அதிகாரிகயைப்
போலவே
அவசரக் கல்யாணத்திற்காய்
கையூட்டு பெற்ற அலுவலக சிப்பந்தியுமிருந்தார்.மஞ்சளில் நூலெடுத்து
முடிச்சிட்ட வேளையில்
அரூபமாய் தூவப்பட்ட
பூக்களாய் இருந்தது
அவர்கள் கொண்டாடிய காதல்.உறவுக் கீறல்கள் விழுந்த
கண்ணாடியாய்
வாழ்க்கை இருந்தும்
அந்த காதலும் கல்யாணமும்
ஒரு சொர்க்கத்தையே
நிச்சயித்திருந்தது
அவ்விருவருக்கும்.
YOU ARE READING
கோட்டோவியங்கள்
Poetry~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்