வலியோடுதான்
சூல்கொண்டதும்
பிரசவித்ததும்.
அதனைவிட அதிகமான
வலிகளோடுதான்
பப்பாளிப்பழம் தின்றதும்
எள்ளெடுத்து மென்றதும்
மாத்திரைகள் விழுங்கியதும்.
அதிதீவிர வலிகளோடுதான்
ஆதூரச்சாலையில் கலைத்ததும்.
இவற்றிற்கெல்லாம் உச்சமாய்
தினந்தோறும் வலிக்கிறது
நாள் கணக்கு காட்டி
தேவையானதொரு
பாதுகாப்பின்றி
அவன் படுக்கைக்கழைப்பது.
VOCÊ ESTÁ LENDO
கோட்டோவியங்கள்
Poesia~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்