அக்கரைப் பச்சை
---------------------------
தன்னை அவ்வப்போது
திரும்பித்திரும்பி
பார்த்தபடி தெருவோரம்
பம்பரம் விட்டுக்
கொண்டிருக்கும்
தன் வயதொத்த
அவனை
அப்பார்ட்மெண்ட்
பால்கணியிலமர்ந்து
ஒன்பதங்குல ஐபேடில்
கேண்டி க்ரெஷ்
விளையாடும் இவனும்
மீண்டும் மீண்டும்
கவனித்துக் கொண்டிருந்தான்.
இருவருமே தத்தம்
விளையாட்டுகளில்
தோற்றுப் போயிருந்தார்கள்
மற்றவர் கைப்பொருள்
கவனங்களில்.---சுரேஷ் பரதன்.
أنت تقرأ
கோட்டோவியங்கள்
شِعر~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்