பரண்மேலிருக்குந்தொட்டில்.

16 2 0
                                    

பரண் மேலிருக்கிறது
அழகிய நகாசு
வேலைப்பாடுகள் கொண்ட
ஊஞ்சல் மாதிரியான
பரம்பரைத் தொட்டிலொன்று.

தாத்தாவின் அப்பா காலத்தில்
அடிக்கடி பரணிலிருந்து கீழிறங்கி
மீண்டும் பரணேறியிருந்த
வரலாறுண்டு அதற்கு.

தாத்தாவின் காலத்தில்
மூன்றுமுறை இறங்கியிருந்ததது.

அப்பா அதை ஒரேயொரு முறைதான் இறக்கியிருந்தார்.

அதுதான் அது கடைசி முறை
பரணிலிருந்து இறங்கியது.

இனி அது தன் வசிப்பிடம்
மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

கோட்டோவியங்கள்Où les histoires vivent. Découvrez maintenant